உலக செய்தி

செலவழித்தது ரூ.38 ஆயிரம்… கிடைத்தது ஏமாற்றம்…. ட்ரம்ப் உடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் செல்பி எடுப்பதற்காக ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு, நேற்று சிங்கப்பூரில் நடந்து முடிந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட இரு தலைவர்களும் சுமார் 48 நிமிடங்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்களின் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் இருவரும் ஈடுபட்டனர். இதில் அணு ஆயுதங்களைக் கைவிடுவது, வடகொரியா மீதான தடைகளை நீக்குவது குறித்த பேச்சுகள் நடைபெற்றன.

இவர்களின் சந்திப்பு தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில், ட்ரம்ப் உடன் செல்பி எடுப்பதற்காக இந்திய வம்சாவளி வாலிபர் ஒருவர் ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன். 25 வயதாகும் இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராம். இதனால், கிம் ஜாங்கை சந்திப்பதற்காக ட்ரம்ப் சிங்கப்பூர் வருவதைத் தெரிந்துகொண்ட மோகன் அவருடன் எப்படியாவது செல்பி எடுக்க வேண்டும் என நினைத்து சிங்கப்பூர் வந்துள்ளார். இதற்காக செண்டோசா தீவில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு மட்டுமே ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார்.

மகாராஜ் மோகன்

அங்கிருந்து ட்ரம்ப் – கிம் சந்திப்பு நடைபெற்ற பகுதிகளில் பல மணி நேரங்களாக சுற்றித்திறிந்துள்ளார். ஆனால், அவரால் ட்ரம்ப் அருகில் நெருங்கமுடியவில்லை. எனினும் அங்கிருந்து ட்ரம்ப் கிளம்பும்போது, அவரின் பீஸ்ட் என்ற கார் அருகே நின்று செல்பி எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து பேசிய மகாராஜ் மோகன்,  “ட்ரம்ப் உடன் செல்பி எடுப்பது கடினம் என அனைவரும் கூறினார்கள். ஆனால், சில நேரம் நாம் எதிர்பாராதவையும் நடக்கும் என்ற எண்ணத்தில், ஒரு சதவிகிதமாவது அவருடன் செல்பி எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முயற்சியில் இறங்கினேன்” எனக் கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி