இலங்கை

சேதமடைந்த பாலம் விரைவில் புனரமைப்பு!

நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட ஹட்டன், லொனெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையின்  பாலத்தை துரிதமாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டவளை ஆகுரோயா பிரதான பாதையின் அகரவத்தையிலிருந்து லொனெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் சேதமாகியது. இதனால் இப் பாலத்தை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, குறித்த தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி இந்த பிரச்சினையை அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நிரந்தரமான பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி