இந்தியா

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடை மீதான போராட்டம் , 2007-ல் சிறுபிரச்னையாகத் தொடங்கிய போராட்டம் 2017-ம் ஆண்டு இளைஞர்கள் கைகளில் சென்றதும் பெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. பீட்டாவுக்கு எதிராகத் தமிழகமெங்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு அலைகளை எழுப்பினார்கள். இளைஞர்களின் பெரும் முயற்சியால் ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழகமெங்கும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு அரசு அனுமதியுடனே நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததால் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அனுமதி தொடர்கிறது. மேலும், ஜல்லிக்கட்டு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி