ஆரோக்யம்

ஜூஸ்லயே அப்பாடக்கர் ஜூஸ் இதுதானாம்… குடிச்சா கிடுகிடுன்னு எடை குறையுமாம்…

எடை குறைப்பு

இதில் உங்கள் உடல் மற்றும் சுவைக்கு தேவையான அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த ஸ்மூத்தியை உங்களின் தினசரி உணவுடன் எடுத்துக்கொள்ளலாம் அல்லது மாலை நேர ஸ்னாக்ஸ்சாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது வாரத்தில் ஒருநாள் காலை உணவிற்கு பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம் என பலவிதங்களில் உதவும்.

இருப்பினும் உங்களின் மதிய உணவிற்கு அல்லது தினசரி ஊட்டச்சத்து உணவிற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்ளுகிறோம். இதில் அதிக அளவு நியூட்ரியண்ட்ஸ் இருந்தாலும், நமது உடலுக்கு பல தரப்பட்ட சத்துக்கள் தேவை எனவே இந்த ஸ்மூத்தியை தினசரி உணவுடன் கூடுதலாக எடுத்துக் கொள்ளவும்.

கீழே பைனாப்பிள் மற்றும் ஜிஞ்சரில் உள்ள நன்மைகளை விவரித்துள்ளோம். இவை இரண்டில் உள்ள நன்மைகளை தெரிந்துகொண்டால் நீங்களே இவற்றை கொண்டு எந்த மாதிரியான ஸ்மூத்தியை தயார் செய்வது என புரிந்துகொள்ளலாம்.

பைனாப்பிள் நன்மைகள்

பைனாப்பிள் நன்மைகள்

• நமது ஸ்மூத்தியில் உள்ள முதன்மை பொருளான பைனாப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளது அதே நேரம் கலோரி மிக குறைந்த அளவே உள்ளது. ஃபிரஷ் பைனாப்பிள் (150 கிராம்) உங்களின் காலை உணவுடன் உண்ண ஆரோக்கியமான கூடுதல் உணவு. மேலும் இது மதிய உணவிற்கு பிறகு உண்ண தகுந்த சரியான பிற்பகல் சிற்றுண்டி.

• எடை குறைப்பிற்கு பைனாப்பிள் ஏற்றது ஏனெனில் இது கொழுப்பு இல்லாத மற்றும் கலோரி குறைந்த சிறந்த பழம்: ஒரு கப் பைனாப்பிள் பழத்தில் சராசரியாக 80 கலோரி உள்ளது. எனவே, உங்களின் நாள் முழுவதுமான எனர்ஜி தேவைக்கும் மற்றும் உங்களின் சிறு பசியை போக்குவதற்கும் பைனாப்பிள் மிகசிறந்த பழம்.

• பைனாப்பிள் பழம் தண்ணீர் சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பழம் அதன் நிகர எடையில் 87 சதவீதம் தண்ணீரை கொண்டுள்ளது. எனவே இது வெப்பமான நாட்களில் உங்களுக்கு தேவையான நீர்சத்தை உங்கள் உடலுக்கு அளிக்கிறது. இதன் மூலம் நீங்கள் கேன்களில் அடக்கப்பட்ட செயற்கை குளிர் பானங்களை தவிர்த்து உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

• இறுதியாக, பைனாப்பிளில் உள்ள புரோமெலைன் என்று அழைக்கப்படும் என்சைம் உங்கள் செரிமானத்திற்கு நல்லது. நல்ல செரிமானம் இருப்பதால் உங்கள் உடலில் வீணாக நச்சுத்தன்மை உருவாக்கப்படுவதை தடுக்கிறது, இதன் மூலம் உடல் வீக்கம் மற்றும் கூடுதல் எடை ஆகியவற்றை தடுக்கலாம்.

ஜிஞ்சரின் (இஞ்சி) நன்மைகள்

ஜிஞ்சரின் (இஞ்சி) நன்மைகள்

• பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தியில் உள்ள இரண்டாவது மூலப்பொருலான இஞ்சி அதிக மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏனெனில் இது எந்த கலோரிகளையும் சேர்க்காது. மேலும், இஞ்சி உண்மையில் ஒரு தெர்மோஜெனிக் மூலப்பொருள் ஆகும். அதாவது இது உங்கள் உடலின் வெப்பநிலையை மேம்படுத்தி உங்கள் வளர்சிதை (மெட்டபாலிசம்) வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் அதிக அளவு கொழுப்பு எரிக்கப்படுகிறது.

• இஞ்சி ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளலைக் குறைக்கும். இது இயற்கையாக பசியை தூண்டக்கூடியது. அதனால் தான் இஞ்சி பாதுகாப்பான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத பொருள்.

• இஞ்சி கார்டிசோல் உருவாவதை கட்டுப்படுத்துகிறது. கார்டிசோல் என்பது ஸ்டீராய்டு ஹார்மோன், நமது உடலின் ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் உடல் பாகங்களுக்கு அளிப்பது. சுருக்கமாக கூறினால், அதிக அளவு கார்டிசோல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும், தேவையற்ற வயிற்று கொழுப்பை நமது உடலில் சேர்த்து எடை அதிகரிக்க வைத்துவிடும்.

• இஞ்சி சாப்பிடுவதால் உடல் பருமனுக்கு முக்கிய காரணமான கொழுப்பை குறைக்கிறது. மேலும் இஞ்சி செரம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

• இறுதி குறிப்பு, இஞ்சி ஒட்டுமொத்த உங்கள் செரிமான மண்டலத்திற்கு நல்லது. இது வயிறு மற்றும் குடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

இங்கே பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தி செய்முறையை கொடுத்துள்ளோம், இது மிகவும் எளிதான விலை குறைந்த மற்றும் சுவையான ஸ்மூத்தி என புரிந்து கொள்வீர்கள். இதன் சிறப்பே இதை செய்வதற்கு ஒரு சில பொருட்கள் போதுமானது எனவே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து பருகலாம்.

சியா விதைகளை (சியா சீட்ஸ்) நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் கொண்ட சிறந்த பொருள். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் ஃப்ரீ ரேடியல்களுக்கு எதிரானவை மற்றும் செல் சேதத்தை தடுக்கின்றன.

அதுமட்டுமல்ல, சியா விதைகளில் கார்போஹைட்ரேட் ஃபைபர் உள்ளது. எனவே, அவற்றை சாப்பிடுவது எடை குறைப்பு மற்றும் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

• ஃபிரஷ் பைனாப்பிள் (150 கிராம்)

• தேங்காய் துருவல் (5 கிராம்)

• 1 கப் தண்ணீர் (250 மிலி)

• சியா விதைகளை 1 தேக்கரண்டி (15 கிராம்)

செய்முறை

செய்முறை

• அனைத்து பொருட்களையும் ஒரு மிஃசர் அல்லது ஜூஸரில் போட்டு ஒன்றாக கலக்கவும்.

• ஒரு ஸ்மூத் டெக்ஸர் (மென்மையாக) வரும் வரை அதிக வேகத்தில் அரைக்கவும்.

• அரைத்த ஸ்மூத்தியை ஒரு டம்ளரில் ஊற்றி, உடனே பருகவும். ஊட்டச்சத்துக்களை மிக அதிகமாக பெற உடனடியாக பருகுவது நல்லது.

அன்னாசிப்பழம் மிகவும் அமில தன்மையுடன் இருப்பதாக உணர்ந்தால், சில துளிகள் தேன் சேர்க்கலாம். தென் சேர்ப்பதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் பொதுவாக இஞ்சி அமிலத்தன்மையை வெளியேற்றுகிறது. இந்த ஸ்மூத்தியை தயார் செய்தவுடன் பருகுவது நல்லது. பைனாப்பிள் காலப்போக்கில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஃப்ரீ ரேடியல்களுக்கு எதிரான செயல்திறன் குறைந்து விடுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி