கலாச்சாரம்

தமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை.. தைவானில் கோலாகல கொண்டாட்டம்!


Essays

Kalai Mathi

தைபே: தைவானில் உள்ள தமிழ்ச்சங்கத்தினர் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

தாய் தமிழ் மண்ணை விட்டு கடல்கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தினை மறக்காமல் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வண்ணமே கிழக்காசிய பிராந்திய அழகிய தீவு தைவானில் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் தைவான் தமிழ்ச் சங்கத்தின் தொடர் நிகழ்ச்சியாக, தன்னுடைய ஆறாம் ஆண்டு பொங்கல் விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடியது.

பொற்றடை ஆண்டு மார்கழி 22 ஆம் நாள் அதாவது ஜனவரி 6ஆம் தேதி தைபேயில் உள்ள ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி தலைமையில் துணைத்தலைவர்கள் முனைவர் சங்கர் ராமன் மற்றும் ரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில் இனிதாய் பொங்கல் விழா நடைபெற்றது.

தைவானில் பொங்கல் பண்டிகை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டத்தில் தைவான் தமிழ் சங்கம் சார்பாக சங்க செயலாளர் முனைவர் ஆகு. பிரசண்ணன் அனைவரையும் வரவேற்று பேச, சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி பொங்கல் விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது.

தைவான் தமிழ்ச்சங்கம்

தைவான் தமிழ்ச்சங்கம்

தைவான் தமிழ் சங்கத்தின் தலைவரும், கவிஞருமான முனைவர் யுசி தலைமையுரையாற்றி விழாவினை தொடக்கி வைத்தார். முதன்மை விருந்தினராக இந்தியா தைபே அசோசியேசன் முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விருந்தினர்கள் வாழ்த்துரை

விருந்தினர்கள் வாழ்த்துரை

மேலும் இப்பொங்கல் விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக மரியாதைக்குரிய விருந்தினர்கள் தேசிய தைவான் பல்கலைக்கழக்தின் சர்வேதச மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை திட்டத்தின் இயக்குனர் முனைவர். சுன் வேய் சென், ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தின் சர்வதேச தொடர்பின் துணைத் தலைவர் முனைவர் மைக்கேல் டி.எஸ். லீ, தேசிய தைபே தொழில் நுட்ப பல்கலைக்கழக சர்வதேச EOMP முனைவர் பட்ட திட்டத்தின் முதன்மை பேராசிரியர். ஷென் மிங் சென் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பாரம்பரிய கிராமிய நடனம்

பாரம்பரிய கிராமிய நடனம்

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக தமிழ் மண்ணின் இயல், இசை, நாடகம் என்று முப்பரிமானத்தில் பாரபரிய மற்றும் கிராமிய நடனம், சிறுவர்-சிறுமியரின் கலை நிகழ்சிகளுடன் அவர்களின் ஆடை-அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது.

தைவானில் தமிழ்த்தூறல்

தைவானில் தமிழ்த்தூறல்

முத்தாய்ப்பாக முனைவர் மு.திருமாவளவன் எழுதிய “தைவானில் தமிழ்த்தூறல்” என்னும் கவிதை தொகுப்பு நூல் தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், கவிஞர் யூ சி வெளியிட துணைத்தலைவர் முனைவர் சங்கர் ராமன் பெற்றுக்கொண்டார். மேலும் எதிர்கால தமிழகத்தை காக்க அனைவரும் அரசியல் பேசவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற “அரசியல் பேசாதே” எனும் நாடகம் பார்வையாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

புலம் பெயர் தமிழர்களா??

புலம் பெயர் தமிழர்களா??

முன்னதாக பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு பட்டிமன்றம் ஒன்று ”தமிழை அதிகம் வளர்ப்பது தமிழக தமிழர்களா??? புலம் பெயர் தமிழர்களா???” எனும் தலைப்பில் நடைபெற்றது. முனைவர் இரா. சீனிவாசன் தலைமையில் தமிழக தமிழர்களே என முனைவர் மு .திருமாவளவன், திரு கி.ராகவேந்திரா, முனைவர் வசந்தன் திருநாவுக்கரசு ஆகியோர் வாதாட இவர்களுக்கு எதிராக முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்களான செல்வன் தயானந்தபிரபு, செல்வி பவித்ரா, செல்வன் தமிழ் ஒளி ஆகியோர் சிறப்பாக பேசினர். இறுதியாக தமிழை அதிகம் வளர்ப்பது புலம் பெயர் தமிழர்களே என நடுவர் அவர்கள் தீர்ப்பளித்து நிறைவு செய்தார்.

தேசிய கீதத்துடன் நிறைவு

தேசிய கீதத்துடன் நிறைவு

நிகழ்ச்சியின் இறுதியாக தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் சு.பொன்முகுந்தன், பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் துணை பொருளாளர் முனைவர் பூபதி சுப்பிரமணி ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சார்பாக நன்றி கூற தேசிய கீதத்துடன் பொங்கல் விழா இனிதே நிறைவடைந்தது.

தமிழ்நெஞ்சங்கள் பங்கேற்பு

தமிழ்நெஞ்சங்கள் பங்கேற்பு

இவ்விழாவினை தைவானின் அனைத்து நகரங்களில் இருந்தும் குறிப்பாக தாய்பெய், ஷிஞ்சு, தைச்சூங், கௌஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

English summary

Taiwan tamil people celebrates pongal festival. lots of peple have participated in the function.

Story first published: Wednesday, January 10, 2018, 12:41 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி