உலக செய்தி

திட்டமிட்டபடி டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு – அமெரிக்க உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு, சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான அணு ஆயுத மோதல் போக்கு முடிவுக்கு வந்து, இருநாடுகளும் சமரசமாகச் செல்வது என முடிவெடுத்துள்ளன. சீனா, தென் கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, வடகொரியா – அமெரிக்கா இடையே சமரசம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதியன்று, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கிம் ஜாங்-கின் உதவியாளர் கிம் யாங் சோல், வாஷிங்டனில் அமெரிக்க அதிபரை சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். வடகொரிய அதிபரின் சார்பில் கடிதம் ஒன்றையும் டிரம்பிடம் கிம் யாங் அளித்தார். 

இதற்கிடையே டிரம்ப் – வடகொரிய அதிபர் சந்திப்பு நடைபெறுமா என்ற சந்தேகம் நீடித்தது. ஆனால், தற்போது அந்த சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் சாரா சாண்டரஸ் கூறுகையில், “வடகொரிய அதிபருடனான சந்திப்பு குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் தினமும் தேசிய பாதுகாப்புக் குழுவினரிடம் இருந்து பெற்று வருகிறார். சிங்கப்பூரில் திட்டமிட்டபடி, வரும் 12-ஆம் தேதி இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள்” என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி