உலக செய்தி

திமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள் – அதிர்ச்சியடைந்த மருத்துவர் குழு!

தாய்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தில் வயிற்றில் இருந்து எட்டு கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகளை மருத்துவ குழுவினர் எடுத்துள்ளனர். 

தாய்லாந்தின் தென் சோங்லா மாகாணத்தில் உள்ள கடற்கரையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திமிங்கலம் ஒன்று கடந்த திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து, அங்கிருந்த மக்கள் கால்நடை மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின், அப்பகுதிக்கு விரைந்த குழுவினர், திமிங்கலத்தை மீட்டெடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடந்து 5 நாள்கள் திமிங்கலத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், சிகிச்சையின்போது, ஐந்து பிளாஸ்டிக் பைகளை அது கக்கியது. பிளாஸ்டிக் பைகளை கக்கிய திமிங்கலம் சற்று நேரத்தில் உயிரிழந்தது. அந்த திமிங்கலத்தைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் 5 நாள்களாக எடுத்த முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை.

இதனையடுத்து, திமிங்கலத்தை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உயிரிழந்த அந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து சுமார் எட்டு கிலோ எடை கொண்ட 80 பிளாஸ்ட்டிக் பைகளை அவர்கள் எடுத்தனர். பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதன் காரணமாக உணவு உண்ண முடியாமல் திமிங்கலம் அவதிப்பட்டு வந்தது இதன்பிறகுதான் தெரியவந்தது. கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டது தான் திமிங்கலத்தின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்திருப்பது இயற்கை ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி