திவுலப்பிட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) வீசிய பலத்த காற்று காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக கம்பஹா மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, பலத்த காற்று காரணமாக சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று இரவிற்குள் மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் […]
