இந்தியா

`தீர்ப்பு ஊசிவெடியாகிவிட்டது'- 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தலைவர்கள் கருத்து

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானதையடுத்து அரசியல்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஓராண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தது. அதில், சபாநாயகர் தீர்ப்பு செல்லும் என இந்திராபானர்ஜியும், சபாநாயகரின் தீர்ப்பு ஏற்புடையதல்ல என நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி கூறுகையில், `ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது; பிழைக்குமா?’ எனத் தெரியவில்லை. அதேபோல பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “இந்தத் தீர்ப்பு அணு குண்டாகவும் இல்லாமல், புஸ்வானமாகவும் இல்லாமல், ஊசிவெடியாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், `இந்த வழக்கில் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். `3-வது நீதிபதிக்குச் சென்றாலும் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாகவே வரும்’ என  வைத்தியலிங்கம் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட முழு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, `இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு; மூன்றாவது நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

திருநாவுக்கரசர் கூறுகையில்,  `இந்த வழக்கு தீர்ப்பில் மோடி கைகாரியம் இருந்திருக்கக் கூடாது என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு 3 வது நீதிபதி தீர்ப்பு வழங்க காலநிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவிக்கும்போது, `மாறுபட்ட தீர்ப்பு அவர்களின் தனிப்பட்ட கருத்து, மேலும் விரைவில் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே மக்களின் மனநிலை’. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி