சீரியல் ஸ்பெசல்

தெய்வமகள் சத்யா, ரேகா பற்றி ஒரு உண்மை தெரியுமா?

சென்னை: தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் எனக்கும் ரேகா கதாபாத்திரத்திற்கும் ஆகாது. ஆனால் நிஜத்தில் நாங்கள் சகோதரிகள் போன்று என்கிறார் தெய்வமகள் சத்யா.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் சத்யாவாக நடிப்பதன் மூலம் பிரபலமாகியுள்ளவர் வாணி போஜன். சுமார் 4 ஆண்டுகளாக அந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சத்யா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

புகைப்படம்

நான் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாள் தயாரிப்பு குழு என்னை அழைத்து சேலை கட்டி வந்து வசனம் பேசுமாறு கூறியது. பேசினேன் தேர்வு செய்துவிட்டார்கள். அதில் இருந்து தெய்வமகள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

நான் இதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும் தெய்வமகள் தான் எனக்கு தமிழ்நாட்டில் பெயர் வாங்கிக் கொடுத்தது. 1400 எபிசோட் முடிந்துவிட்டது. 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

டிஆர்பி

டிஆர்பி

தெய்வமகள் தொடர் ஹிட்டாகும் என தெரியும். ஆனால் சூப்பர் ஹிட்டாகும் என தெரியாது. இதில் நடித்து வரும் அனைவரும் ஒரு குடும்பம் போன்று ஆகிவிட்டோம். தொடரில் எனக்கும் ரேகா கதாபாத்திரத்திற்கும் ஆகாது. ஆனால் நிஜத்தில் நாங்கள் சகோதரிகள் போன்று. தமிழக மக்கள் என்னை இந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.

மேக்கப்

மேக்கப்

இந்த தொடரில் என் லுக்கை நானே பார்த்துக் கொள்கிறேன். என் உடை, மேக்கப்பை நானே பார்த்துக் கொள்கிறேன். என் கதாபாத்திரத்திற்கு ஏற்றது போன்ற உடைகளை தேர்வு செய்கிறேன். சேலை கட்டிக் கொண்டு, ஓவர் மேக்கப் போட்டு வழக்கமான சீரியல் நடிகை போன்று இருக்க விரும்பவில்லை.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

சினிமா படங்களில் நடிக்க விரும்பி தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் துவங்கவில்லை. சீரியலில் நடிக்கும் முன்பே பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தற்போதும் வாய்ப்புகள் வருகிறது என்றார் வாணி போஜன்.

English summary

Deivamagal TV serial fame Vani Bhojan said that though Rekha and Sathya characters don’t get along in the serial, they are like sisters on the set. Vani Bhojan is popular among the people of Tamil Nadu as Sathya.

Story first published: Monday, December 11, 2017, 12:20 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி