கிசு கிசு

நிவின்பாலி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

சென்னை : நிவின்பாலி தற்போது மலையாளத்தில் ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். அமலா பால் நடிப்பதாக இருந்து பின்னர் அவர் விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை தமிழில் ’36 வயதினிலே’ புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். கேரளாவில் எண்பதுகளில் ராபின்ஹூட் போல வாழ்ந்த ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்கிற பயங்கர கொள்ளையனின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

தற்போது இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மோகன்லால். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியாகியுள்ளது. அந்த முக்கியமான கேரக்டரில் மோகன்லாலை தவிர வேறு யார் நடித்தாலும் சிறப்பாக இருக்காது என இயக்குனர் கூறியதை ஏற்றுக்கொண்டு இதில் நடிக்கச் சம்மதித்துள்ளாராம் மோகன்லால்.

இதற்கு முன் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ”உதயநானுதாரம்’, ‘இவிடம் சொர்க்கமானு’, ‘காசனோவா’ ஆகிய படங்களில் மோகன்லால் நடித்துள்ளார் என்பதும் அந்த நட்பின் அடிப்படையில் மோகன்லால் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.

English summary

Nivin pauly is currently acting in the movie ‘Kayamkulam Kochunni’. Priya Anand plays the heroine role of the film. Mohanlal plays the most important role in this film.

Story first published: Tuesday, January 9, 2018, 18:15 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி