ஆரோக்யம்

நைட்ல சிக்கன் சமைச்சு காலைல சூடு பண்ணி சாப்பிடற ஆளா நீங்க… அப்போ இத நீங்கதான் படிக்கணும்…

சரியாக வேகாத இறைச்சி

புட் பாய்சனிங் ஏற்படுத்தும் முதன்மையான உணவுப் பொருள் சரியாக வேகவைக்காத இறைச்சிகளாகும். “பெரும்பாலான கோழிப்பண்ணையின் பச்சையான இறைச்சிகள் “காம்பைலோபாக்டரைக் ” கொண்டுள்ளது. இது சால்மோனெல்லா, க்ளோஸ்ட்ரிடியம் பெர்ஃபெரிடன்ஸ் மற்றும் பிற பாக்டீரியாக்களையும் கொண்டிருக்கலாம். வேகவைக்காத இறைச்சியானது சால்மோனெல்லா, ஈ. கோலி , எர்சினியா மற்றும் பிற பாக்டீரியாவைக் கொண்டிருக்கலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன. நன்றாக வேகவைத்த கோழி மற்றும் இறைச்சியில் பாக்டீரியாக்கள் முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது, ஆனால் இறைச்சி ஒழுங்காகத் தான் சமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்துக் கண்டுபிடிக்க முடியாது.எப்போதும் ஒரு இறைச்சி தெர்மோமீட்டரைப் பயன்படுத்தி சமையல் ஒரு பாதுகாப்பான உள் வெப்பநிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் நச்சுத்தன்மையை உண்டாக்கும் இந்த சமையல் தவறுகளைக் கவனிக்கவும்,

அடுத்த நாள் சூடுசெய்து சாப்பிடுதல்

அடுத்த நாள் சூடுசெய்து சாப்பிடுதல்

நீங்கள் அதை சமைத்திருப்பதால் எஞ்சியிருக்கும் போது அது பாதுகாப்பானதாகவே இருக்கும் என்று அர்த்தம் இல்லை.தயாரிப்பின் பின்னர் 2 மணி நேரத்திற்குள் மீந்த உணவை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் கீழ் வெப்பநிலையில் குளிரூட்டப்பட்ட இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். சேவல் அல்லது முழு வான்கோழி போன்ற இறைச்சியின் பெரிய துண்டுகள் குளிர்பதனத்திற்குள் எளிதாக வைக்கும்படி சிறிய அளவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். இதனால் அனைத்து இறைச்சியின் பாகங்களும் எளிதாக குளுமையடைந்து வளரும் பாக்டீரியாவைத் தடுக்க உதவும். மிஞ்சிய இறைச்சிகளை மீண்டும் பயன்படுத்தும் முன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்காவிட்டால், ​​உங்கள் இறைச்சியை இங்கு பட்டியலிடப்பட்டுள்ள உள் வெப்பநிலைகளில் சமைக்க வேண்டும். மேலும் , நீங்கள் ஒரு கோல்ட் சாலட்டில் மீதமுள்ள இறைச்சியைப் பயன்படுத்தும்போது, ​​அதே விதி பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.

கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்:

கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்:

உணவு சேமிக்கப்பட்ட கேன் மிகவும் ஆழமாக வளைந்தோ அல்லது குழியாகி இருந்தாலோ, அதிலுள்ள உணவைச் சாப்பிட வேண்டாமென யுஎஸ்டிஏ உணவு பாதுகாப்பு மற்றும் ஆய்வு சேவை அமைப்பு அறிவுறுத்துகிறது. ஆழமான வளைவு உங்கள் விரல் வைக்க முடியும் அளவிற்கு உள்ள போது அதிலுள்ள கூர்மையான பகுதிகளின் மேல் அல்லது பக்க மடிப்புகளில் சேதம் ஏற்பட்டு பாக்டீரியாவை உள்ளே நுழைய அனுமதிக்கலாம், அது நமக்கு ஏற்றதல்ல. இந்த உணவு விஷம் பற்றிய பண்டைய அறிவுடன் பாதுகாப்பாக நீங்கள் அவற்றைப் புறக்கணிக்கலாம்.

காய்ச்சாத (unpasteurized) பால்

காய்ச்சாத (unpasteurized) பால்

பசுவிலிருந்து கறந்த பாலானது சூடுபடுத்துவதற்கு முன் கொண்டுள்ள பாக்டீரியாக்கள் உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை .அவற்றில் காம்பைலோபாக்டர், க்ரிப்டோஸ்போரிடியம், ஈ. கோலை, லிஸ்டியா, மற்றும் சால்மோனெல்லா ஆகியவை அடங்கும். லிஸ்டிரியோசிஸ் (லிஸ்டீரியாவால் ஏற்படும் தொற்று) அரிதானது என்றாலும், கர்ப்பிணிப் பெண்களின் நோயெதிர்ப்புத்திறன் இதனுடன் போட்டியிட முடியாது. ஆகவே இவை கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று அர்த்தம். கூடுதலாக, பிறக்காத குழந்தைக்கு உடல்நிலைக் குறைவை ஏற்படுத்தும் திறனுள்ளவை இவை.இதை எடுத்துக்கொள்ளும் குறைவான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட வயதானவர்கள் மற்றும் மக்கள் , பொது மக்களை விட அதிக ஆபத்தில் உள்ளனர் என்றே அர்த்தம் .

எனவே, அனைவரும் சூடுபடுத்தி சுத்திகரிக்கப்பட்ட பால் குடிப்பதே சிறந்தது.அதிக ஆபத்தில் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் unpasteurized பாலில் (எடுத்துக்காட்டாக, வேகவைக்காத சீஸ்,) செய்யப்பட்ட எந்த பால் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எப்போதும் சாப்பிடாத சில உணவைகளையும் சாப்பிடக் கற்றுக்கொள்ளுங்கள்.

வேகவைக்காத முட்டை

வேகவைக்காத முட்டை

முட்டை சுத்தமாக மற்றும் விரிசல் இல்லாமலிருந்தாலும் சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கலாம். உடம்பு சரியில்லாமல் தடுக்க, மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பகுதிகள் நன்றாக வேகும் வரை முட்டைகளைச் சமைக்க வேண்டும். முட்டைகளைச் சேர்க்கும் உணவுகளையும் நன்கு சமைக்க வேண்டும். உங்கள் முட்டைகளை 40 ° F அல்லது குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வேகவைக்காத குக்கீ மாவு அல்லது கேக் மாவை சாப்பிட வேண்டாம்.

ரா ஷெல் பிஷ் (கிளிஞ்சல் மீன்)

ரா ஷெல் பிஷ் (கிளிஞ்சல் மீன்)

சிப்பிகள் மற்றும் பிற கிளிஞ்சல் மீன் வகைகள் , வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவைக் கொண்டிருக்கக்கூடும். வேகவைக்காத மற்றும் பச்சையான சிப்பிகள் விப்ரியோ பாக்டீரியாவைக் கொண்டிருக்கக்கூடும், இது விப்ரியோசிஸ் எனப்படும் தொற்றுக்கு வழிவகுக்கும். அசுத்தமான தண்ணீரிலிருந்து அறுவடை செய்யப்பட்ட சிப்பிகள் நொரோவிஸைக் கொண்டிருக்கலாம்.

இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுகிறது. உணவு விஷமாவதைத் தவிர்க்க, உங்கள் கடல் உணவை நன்கு சமைக்கவும்.இறைச்சி, கோழி, மற்றும் கடல் உணவுகளின் ஒவ்வொரு வகைக்கும் சரியான சமையல் வெப்ப நிலையைக் கண்டுபிடிக்க இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தவும்.

கழுவாத பழங்கள் மற்றும் காய்கறிள் :

கழுவாத பழங்கள் மற்றும் காய்கறிள் :

புதிய தயாரிப்புகளைச் சாப்பிடுவது சிறந்த உடல் நலன்களை வழங்குகிறது, ஆனால் சில நேரங்களில் புதிதாகப் பறிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் சால்மோனெல்லா, ஈ கோலை, லிஸ்டியா, மற்றும் பிற பாக்டீரியாவைக் கொண்டிருக்கலாம்.காய்கறி மற்றும் பழங்களைப் பறிக்கும் இடத்திலிருந்து உங்கள் சமையலறை வரை மாசுபடுதல் நிகழ்வு எங்குவேண்டுமானாலும் நிகழலாம். எனவே உங்கள் பொருட்களை எப்போதும் கவனமாகக் கழுவவும்.

உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு எந்த காரணத்திற்காகவும் குறைவாக இருந்தால் (உதாரணமாக, நீங்கள் கீமோதெரபி சிகிச்சையில் இருந்தால், அல்லது சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால்), சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு முறை அதை சுத்தம் செய்யுங்கள். விவசாயச் சந்தையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச்செல்லும் பொருட்களை சுத்தம் செய்ய நான்கு வழிகள் உள்ளன.

பதிவு செய்யப்பட்ட டயடீசியன் மருத்துவர் Jodi Danen படி, தோல்கள் உரிக்கப்பட்ட பழங்களுக்கும் இது பொருந்தும். நீங்கள் உங்கள் விரல்களால் உரிந்த பாகத்தைத் தொடுகிறீர்கள் அல்லது உரிந்த பாகத்தின் மேல் வெட்டுகிறீர்கள்.இதனால் பழங்களின் உள்பகுதி கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன.

கூடுதலாக, ஒரு முறை வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க நான்கு மணி நேரத்திற்குள் அவற்றை குளிரூட்டப்பட்ட சேமிப்பு அறையில் வைக்கவேண்டுமென மருத்துவர் Jodi Danen கூறுகிறார். உணவு விஷத்தைக் கொடுக்கக் கூடிய உங்களுக்கே தெரியாத சில ஆச்சரியமூட்டும் உணவுவகைகளை கிழே பாருங்கள்,

சமைக்கப்படாத மாவு:

சமைக்கப்படாத மாவு:

“அய்யே ! நான் ஏன் சமைக்காத மாவைச் சாப்பிடுவேன்? என நினைக்கிறீர்களா. “ஹலோ, குக்கீ மாவை மறந்துட்டீங்களா?. தீங்கிழைக்கும் கிருமிகள் தானியத்தில் ,வயலில் இருக்கும் போது தொடங்கி உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் வீட்டிற்குள் நுழையும் வரை மாசுபடுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் சமைத்த பின் அந்த கிருமிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறீர்கள். அதனால் கிண்ணத்தில் உள்ள மாவை நக்கிவிடாதீர்கள்!. சமைக்காத மாவுப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி மேலும் சில தகவல்கள் உள்ளன. (பொதுவாக சமைக்காத மாவு மற்றும் தண்ணீரில் கரைத்த மாவு).

வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள்

வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள்

முளைகட்டிய தானியங்கள் உடலுக்கு மிகவும் நல்லது என்றுதானே இந்நாள் வரைக் கேட்டு வருகிறோம். பொறுங்கள் , என்ன? முளைகட்டிய தானியங்கள் முற்றிலும் சுகாதாரமான உணவு இல்லையா ? ஆமாம், ஆனால், இல்லை. சூடான, ஈரமான நிலைகளில் இந்த முளை கட்டப்பட்ட தானியங்கள் வளர்க்கப்படுகின்றன, இதனால் அவை அடிப்படையில் கிருமிகளுக்கு (சால்மோனெல்லா, ஈ. கோலை, மற்றும் லிஸ்டீரியா உட்பட) ஒரு பெட்ரி டிஷ் ஆகும். முற்றிலும் சமைத்த பின் முளைகளில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன . எனவே, நீங்கள் முற்றிலும் வேகவைக்காத முளைகளை , உங்கள் சாண்ட்விச்கள் மற்றும் சாலட்களில் பயன்படுத்துவதற்கு முன் சிந்தித்துப் பாருங்கள்.

உணவினால் உண்டாகும் நோய்கள் பற்றிக் கூறும் மிகவும் பயனுள்ள தகவல்களை பிர்மின்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழக தலைமை நோய்த்தடுகில் நிபுணர் “பெர்நார்ட் கேமின்ஸ், எம்.டி.,” தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார், இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும். அடுத்து, உணவு உற்பத்தியாளர்கள் உங்களுக்குக் கூறாத இரகசியங்களைப் பற்றிப் படியுங்கள் – அது நீங்கள் உண்ணும் விதத்தையே மாற்றிவிடலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி