ஆரோக்யம்

நைட் தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

செரிமானம் மேம்படும்

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

குடல் ஆரோக்கியம் மேம்படும்

குடல் ஆரோக்கியம் மேம்படும்

நம் உடலிலேயே நல்ல பாக்டீரியாக்கள் வாழும் பகுதி என்றால் அது குடலில் தான். ஆப்பிள் நமது பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

இரத்த சோகையை சரிசெய்யும்

இரத்த சோகையை சரிசெய்யும்

ஆப்பிள் இரத்த சோகையை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகும். இதனை இரும்புச்சத்து உள்ள உணவுகளைக் கொண்டு தான் சரிசெய்ய முடியும். இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், இரத்த சோகையைத் தடுப்பதுடன், உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து, உறுப்புக்களும் நன்கு செயல்படும்.

உடல் பலவீனத்தைக் குறைக்கும்

உடல் பலவீனத்தைக் குறைக்கும்

ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். யார் ஒருவர் நோய்வாய்ப் பட்டுள்ளார்களோ, அவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவது குறையும். ஆப்பிளில் இருக்கும் பாலிஃபீனால்கள், க்ளுக்கோஸ் உறிஞ்சுவதையும் குறைக்கும் மற்றும் கணையத்தில் இருந்து இன்சுலின் வெளியீட்டையும் தூண்டிவிட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும்.

இதய நோய்கள் தடுக்கப்படும்

இதய நோய்கள் தடுக்கப்படும்

ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம். ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும்.

சுவாச பிரச்சனைகளைப் போக்கும்

சுவாச பிரச்சனைகளைப் போக்கும்

இன்று ஏராளமானோர் சுவாச பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். குறிப்பாக ஆஸ்துமாவினால் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் ஆப்பிளை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, சுவாச பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

அல்சைமர் நோயைத் தடுக்கும்

அல்சைமர் நோயைத் தடுக்கும்

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பணப்கள், அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். மூளையில் உள்ள செல்கள் சிதைவடைந்தால் ஏற்படுவது தான் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இது முதுமைக் காலத்தில் தாக்கும் நோயாகும். உங்களுக்கு முதுமையில் இம்மாதிரியான கொடுமை நடைபெறக்கூடாது என்றால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

தூங்கும் முன் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இது உண்மையா? ஊட்டச்சத்து நிபுணரான அமாண்டா, இரவில் படுக்கும் முன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அதோடு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும். அதோடு ஆப்பிளில் கலோரிகளும் மிகவும் குறைவு.

இரவில் சாப்பிடும் கலோரிகள் உடலில் கொழுப்புக்களாக மாறும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு. கலோரிகள் எப்போது கொழுப்புக்களாக மாறும் என்பது தெரியுமா? ஒருவரது உடலில் கலோரிகளானது கொழுப்புக்களாக மாறுவதற்கு ஒரு நாள் ஆகும். எனவே கலோரிகள் எப்போதுமே நாம் உட்கொண்ட உடனேயே கொழுப்புக்களாக மாறாது என்றும் அமாண்டா கூறுகிறார்.

உண்மையான காரணம் என்ன?

உண்மையான காரணம் என்ன?

ஆப்பிளை இரவில் தூங்கும் முன் சாப்பிடுவது நல்ல என்று கூறுவதன் உண்மையான காரணம், இரவில் பசி எடுத்தால், அப்போது பிஸ்கட் அல்லது இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், அதில் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அதுவே பசியின் போது ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் மேம்படும், கலோரிகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இருக்காது. மேலும் இரவு நேரத்தில் உடலுக்கு ஆற்றலே தேவையில்லை.

எனவே இரவில் பசிக்கும் போது கண்ட பழங்களுக்கு பதிலாக, ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள், நிச்சயம் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி