ஆரோக்யம்

பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!

பலாப்பழம் பற்றி தெரியாதவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு இது எல்லாருக்கும் விருப்பமான ஒன்றாகும். இந்த பலாப்பழம் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. எனவே தான் வெப்ப மண்டல நாடுகளான பங்களாதேஷ் இதன் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

சாப்பிடுவதற்கு தித்திக்கும் சுவையை கொண்ட இந்த பழத்தின் விதைகளை சமையலில் கூட பயன்படுத்துகின்றனர்.

முப்பெரும் கனிகளில் ஒன்றாக இருக்கும் இப்பழம் சீசன் பழமும் கூட. கோடை காலத்தில் மட்டுமே உற்பத்தியாகிறது.

இதில் எண்ணற்ற ஆரோக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளது இதன் மிகச் சிறப்பு. இதில் சபோனின், லிக்னன்ஸ், பைப்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஜஸோப்ளோவோன்ஸ் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த பொருட்கள் புற்று நோய்க்கு எதிராக செயல்பட்டு புற்று நோய் செல்களை அழிக்கிறது.

இந்த பொருட்கள் கருப்பை புற்று நோய் செல்களை தடுக்கிறது. இதன் சபோனின் என்ற பொருள் புற்று நோய் செல்லின் சுவர்களை அழித்து புற்று நோய் அதிதீவரமாக வளராமல் தடுக்கிறது.

மேலும் பலாப்பழம் குடல், நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.

அப்படிப்பட்ட எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களை கொண்டு இருக்கும் இந்த பலாப்பழத்தின் மற்ற நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆரோக்கியமான சருமம் பெற

இந்த பலாப்பழம் நமக்கு ஆரோக்கியமான அழகான பொலிவு நிறைந்த சருமத்தை கொடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், பொலிவின்மை போன்றவற்றை போக்கி ஆரோக்கியமான சருமத்தை தருகிறது.

சரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.

மேலும் இதிலுள்ள நார்ச்சத்துகள் நமக்கு ஏற்படும் மலச்சிக்கலையும் களைகிறது.

பொலிவான சருமம் கிடைக்க இந்த பழத்தின் விதைகளை தேனில் ஊற வைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த முறையை தினமும் செய்யும் போது நல்ல மாற்றத்தை காணலாம்.

அதிக புரோட்டீன் சத்து

அதிக புரோட்டீன் சத்து

இந்த பலாப்பழத்தை தினமும் காலை அல்லது மதிய வேளை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடும் போது இயற்கையாகவே பசியை தூண்டுகிறது. இதை சாலட் மாதிரியும் சாப்பிடலாம். இதிலுள்ள புரோட்டீன் சத்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அள்ளித் தருகிறது.

அழகான கூந்தல் பெறுவதற்கு

அழகான கூந்தல் பெறுவதற்கு

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க தேவையான போஷாக்கு மற்றும் மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அழகான கூந்தல் வளர்ச்சியை கொடுக்கிறது. தினமும் சில துண்டு பலாப்பழம் சாப்பிடும் போது கிடைக்கும் விட்டமின் ஏ மூலம் உங்கள் உடைந்த முடிகள், வறண்ட கூந்தல் போன்றவற்றையும் சரி செய்யலாம்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல்

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல்

பலாப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலுக்கு ஒரு அரணாக செயல்பட்டு வைரஸ் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இதிலுள்ள பாலிசாக்ரைடுகள் நோயெதிர்ப்பு செல்களான போகோசைடிக் செயலுக்கு உதவுகிறது.

ஆற்றல் தருதல்

ஆற்றல் தருதல்

இதிலுள்ள புரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இது கொழுப்பு இல்லாத கலோரி அதிகமான கார்போஹைட்ரேட் உணவாக இருப்பதால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் செல்களின் எலக்ரோலைட் பொருட்களான சோடியத்தின் அளவை சமம்படுத்துகிறது. இதனால் உடலின் இரத்த அழுத்தம் சீராக மாறி இதய நோய்கள் மற்றும் இரத்த குழாய் பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் இதுள்ள விட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள ஹோமோசயிதேனை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கி சீரண மண்டலத்தை சீராக்குகிறது. மேலும் வயிற்றில் அல்சர் ஏற்படாமல் இருக்க இதிலுள்ள அல்சர் எதிர்ப்பு பொருள் உதவுகிறது.

கண்பார்வை அதிகரித்தல்

கண்பார்வை அதிகரித்தல்

பலாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை கண்புரை, மாக்குலார் டிஜெனரேசன் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. எனவே இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான கண் பார்வையை பெறலாம்.

ஆஸ்துமாவிலிருந்து விடுபட உதவுதல்

ஆஸ்துமாவிலிருந்து விடுபட உதவுதல்

தினமும் இந்த பழத்தை உண்டு வந்தால் சுவாச மண்டல பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.

ஆரோக்கியமான வலுவான எலும்புகள் கிடைக்க

ஆரோக்கியமான வலுவான எலும்புகள் கிடைக்க

பலாப்பழத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் கால்சியம் சத்து சிறுநீர் வழியாக தேவையில்லாமல் வெளியேறியதை தடுத்து அதை எலும்பின் உறுதிக்கு அளிக்கிறது. வயதான பிறகு ஏற்படும் எலும்பு முறிவை இதிலுள்ள மக்னீசியம் தடுக்கிறது.

அனிமியாவை குறைத்தல்

அனிமியாவை குறைத்தல்

பலாப்பழத்தில் உள்ள விட்டமின் சி, கே, ஈ, ஏ, பி6, நியசின், பேன்டோதேனிக் அமிலம், ஃப்லோட், மக்னீசியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உடலில் இயற்கையாகவே இரத்தம் உற்பத்தியாக உதவுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சி கொள்ள இவைகள் பெரிதும் உதவுகின்றன. இதன் மூலம் இரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல்

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல்

சாதாரணமாக பார்த்தால் இதிலுள்ள சர்க்கரையால் இதை டயாபெட்டீஸ் நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இதிலுள்ள மாங்கனீஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

தைராய்டு சுரப்பை ஆரோக்கியமாக்குகிறது

தைராய்டு சுரப்பை ஆரோக்கியமாக்குகிறது

தைராய்டு சுரப்பி ஒழுங்காக சுரக்கா விட்டால் நமக்கு ஏராளமான உடல் உபாதைகள் வரும். இந்த பலாப்பழத்தில் உள்ள காப்பர் போன்ற சில தாதுக்கள் தைராய்டு சுரப்பை ஆரோக்கியமாக்குகிறது. சரியான அளவில் தைராய்டு சுரப்பை ஏற்படுத்தி உடல் மெட்டா பாலிசத்தை சரியாக செயல்படுத்துகிறது.

மரபணு டிஎன்ஏ வின் அரணாக செயல்படுதல்

மரபணு டிஎன்ஏ வின் அரணாக செயல்படுதல்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்லின் டிஎன்ஏ விற்கு அரணாக செயல்பட்டு கேன்சர் செல் உருவாகாமல் தடுக்கிறது. நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடலை சுத்தப்படுத்தி குடல் புற்று நோயிலிருந்தும் நம்மை காக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி