உலக செய்தி

பாலியல் வல்லுறவிற்கு மறுவரையறை

151201101754_german_parliament_640x360_afpgettyஒருவரது அனுமதியின்றி பாலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவுதான் என்று பாலியல் வல்லுறவிற்கு மறுவரையறை கொடுக்கப்பட்ட முக்கிய சட்டத்திற்கு ஜெர்மனியின் கீழவை நாடாளுமன்றம் பண்டிஸ்டாக் அனுமதியளித்துள்ளது.

”முடியாது” என்றால் ”முடியாது” என்று பரவலாக அழைக்கப்படும் இந்த சட்ட விதியின் மூலம், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படுவோர், வல்லுறவின் போது எதிர்ப்பு காட்டவில்லை என்றாலும், சுலபமாக குற்றவியல் புகார்களை பதிய முடியும்.

இந்த சட்டமானது பாலியல் சீண்டல்களை பாலியல் குற்றங்கள் என வரையறைத்துள்ளது. மேலும், பாலியல் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் சில தளர்வுகளை மேற்கொண்டு, குழுக்களாக இயங்குவோர் மீது வழக்குத் தொடுக்கும் முறை பின்பற்றப்பட உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொலோங் நகரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டதாக வந்த தகவல்களை தொடர்ந்து ஜெர்மன் அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த துன்புறுத்தல்களில் அரபு மற்றும் வட ஆஃப்ரிக்க ஆண்கள் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி