சீரியல் ஸ்பெசல்

பிக்பாஸுக்கு இதுவரை ஓட்டு போட்டவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்களில் நடிகர் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பம் முதலே சின்னத்திரையில் அதிகம் பிரபலமான இந்த நிகழ்ச்சியை இதுவரை உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களில் 85% பேர் பார்த்துள்ளதாக கமல் கூறியுள்ளார். 6.5 கோடி ரசிகர்கள் என்பது சாதாரண விஷயமல்ல என கமல் பெருமையுடன் கூறினார் கமல்.

குழந்தைகள் சிலர் மேடைக்கு வந்து, பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசிய வைரல் வாக்கியங்களை வாசித்துக் காட்ட, அவற்றைச் சொன்னது யார் எனக் கண்டுபிடித்து, அவர்களைப் போலவே பேசிக் காட்டினர்.

ஓவியாவின் ‘கொக்கு நெட்டக் கொக்கு’ பாடலை க்யூட்டான குழந்தை ஒன்று அழகாகப் பாடிக் காட்டியது. ஓவியாவைப் போலவே ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க…’ எனவும், ‘மூஞ்சியில ஸ்ப்ரே அடிச்சு போட்டுடுவேன்’ எனவும் பேசி ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியது அந்தக் குழந்தை. ஓவியாவும் அதை வெகுவாக ரசித்துச் சிரித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று பார்வையாளர்களைக் கணிக்கச் சொன்னார் கமல். பிறகு, மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை திரையில் காட்டப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களைக் காப்பாற்ற இதுவரை 76,76,53, 065 வாக்குகள் வந்திருக்கின்றனவாம். பார்வையாளர்களும், போட்டியாளர்களும் இந்த எண்ணிக்கையைப் பார்த்து மலைத்தனர்.

English summary

The grand finale show of the biggboss show is currently airing. Cute children were play like biggboss contestants on stage. The total number of voting so far to show biggboss rivals was shown on the screen.

Story first published: Saturday, September 30, 2017, 23:21 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி