சீரியல் ஸ்பெசல்

பிக்பாஸ் விருந்தாளிகளே… என்னென்னமோ சொல்றீங்க… ஒருத்தராவது செய்வீங்களா?

சென்னை : தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் டாஸ்க் கொடுக்கப்படும். அந்தவகையில் 95-நாளான நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவர்களது ரியாக்‌ஷனை குறும்படமாக எடுக்கவேண்டும் என்பதுதான் டாஸ்க். அந்த வீடியோக்கள் அவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

பெரிய நூலகம் கட்டணும் :

சினேகன் வழக்கம்போல அழுகையுடன் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி என்றார். ‘இந்தப் பணத்தை வைத்து நான் ஏற்கெனவே சொன்னது போல 100 கிராமங்களுக்கு பொதுவான நூலகம் ஒன்றைக் கட்டுவேன். அந்த நூலகத்தை கமல் தான் திறந்து வைக்க வேண்டும்’ என்றார்.

வாழ வைத்த உள்ளங்களுக்கு நன்றி :

வாழ வைத்த உள்ளங்களுக்கு நன்றி :

ஹரீஷ், தரையில் எல்லாம் உருண்டு புரண்டு ஹவுஸ்மேட்ஸை கட்டிப்பிடித்து விட்டு என்னை இத்தனைநாளாக வாழ வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்று கூறினார்.

சமர்ப்பிக்கிறேன் :

சமர்ப்பிக்கிறேன் :

பிந்து மாதவி அவரிடம் கொடுக்கப்பட்ட பாத்ரூம் பிரஷை கையில் அவார்டு போல வைத்துக்கொண்டு, இந்த விருதை எனது படத்தின் ஹீரோ, இயக்குனர், ஒளிப்பதிவாளர், இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார். ஆரவ் பிந்துவிடம் வந்து, ‘இது படம் இல்லை, பிக்பாஸ் வீடு’ என்று கூறி கலாய்த்தார். ஆனால் நேற்று நள்ளிரவே பிக்பாஸ் வீட்டிலிருந்து பிந்து மாதவி எவிக்ட் செய்யப்பட்டார்.

மக்களின் அன்பு :

மக்களின் அன்பு :

கணேஷ் பேசும் போது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்குக் கிடைத்த முக்கியமான விஷயமே மக்களின் அன்பு தான். இதற்காகத்தான் இங்கே கலந்து கொண்டேன் என்றார்.

விவசாயிகளுக்கு உதவுவேன் :

விவசாயிகளுக்கு உதவுவேன் :

ஆரவ் பேசும் போது, ‘பிக்பாஸ் வெற்றியில் கிடைத்த பணத்தை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தான் செலவு செய்வேன்’ என்றார். எல்லோரும் பலவிதமாக மக்களைக் கவரும்படி பேசினஅலும், உண்மையிலேயே இவர்கள் டைட்டில் வென்றால் வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா எனத் தெரியவில்லை.

English summary

Kamal Haasan’s hosted Biggboss show is in the final stages. Yesterday’s program was asked how to react if you win the Biggboss title. Contestants say they want to spend that money to people and farmers.

Story first published: Friday, September 29, 2017, 14:21 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி