இலங்கை

பிரதியமைச்சர் விவகாரம்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

இந்து மத விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்து மக்களின் ஒற்றுமை என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இந்துமத அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த பிரதியமைச்சர் நியமனத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் உடனடியாக இந்துமத விவகாரத்திற்காக இந்து மதத்தினை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதி நல்லிணக்கத்தினை காட்டவிரும்பினால் பௌத்த விவகாரத்திற்கான அமைச்சினை வேறு ஒரு மதத்திற்கு வழங்கி பார்க்கவேண்டும்.

ஆனால் அவர்கள் அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஒரு மதத்தின் கலாசாரம் மற்றும் விதிமுறைகளை அறியாத வேறு மதத்தினைச் சேர்ந்தவர் எவ்வாறு எமது கோவில்களில் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்.

எனவே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் ஜனாதிபதியே. எனவே அவர் இரண்டு மதங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி