இலங்கை

பிரான்ஸ் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டது குட்டி பாண்டா கரடி!

ஞாயிறு, ஜனவரி 14, 2018 – 05:22 மணி

பிரான்ஸ் நாட்டு உயிரியல் பூங்கா ஒன்றில் பிறந்து 5 மாதங்களேயான பாண்டா கரடிக்குட்டி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

பாரிஸ் நகருக்கு அருகே உள்ள பெவ்வால் ((Beauval zoo)) உயிரியல் பூங்காவில் உள்ள பாண்டா கரடி ஒன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு ஆண் குட்டிகளை ஈன்றது.

இந்நிலையில் ஒரு குட்டி இறந்து விட மீதமுள்ள ஒரு குட்டியை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வருகின்றனர் பூங்கா நிர்வாகிகள்.

இந்நிலையில் அந்த குட்டி பாண்டாவைப் பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் குட்டி பாண்டாவைப் பார்க்க திரண்டனர்.

அப்போது அந்த குட்டி கரடி செய்த சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது தத்தித் தத்தி நடக்கும் குட்டியை பொத்தி பொத்தி பாதுகாத்து வருகின்றனர் விலங்கியல் பூங்கா நிர்வாகிகள்.


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி