இந்தியா

புதுச்சேரியில் இன்றிலிருந்து பொங்கல் பரிசு விநியோகம்!

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கான பரிசுப் பொருள்களுக்கும் மாதாந்திர இலவச அரிசியை வழங்குவதற்கும் ஆளுநர் கிரண்பேடி கடந்த 10-ம் தேதி ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் பணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். பச்சரிசி, வெல்லம், பச்சைப் பயிறு, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட 5 பொருள்கள் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால், ஏணாம் ஆகிய மூன்று பிராந்தியங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 31 ஆயிரத்து 244 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

பரிசு பொருள்களின் விவரம்:

1. பச்சரிசி – 1 கிலோ.

2. பச்சை பயிறு – 1/2 கிலோ.

3. வெல்லம் – 1/2 கிலோ.

4. முந்திரி – 25 கிராம்.

5. ஏலக்காய் – 10 கிராம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி