கலாச்சாரம்

புத்தம் புது பூமி வேண்டும்.. பாரீஸில் திரில் புத்தாண்டு.. ஒரு வாசகியின் அனுபவம்!

கேளிக்கைகளின் கொண்டாட்டம்

பலர் கையில் மது பாட்டில் நிறைந்த பைகள், வழியில் பல இடங்களில் காலி மதுபுட்டிகள் சிதறி கிடந்தன. இனிமேல்தான் இவர்களின் உண்மையான கேளிக்கை நேரம் ஆரம்பம் என்பதை எனக்கு உணர்த்தியது. எல்லோரும் பயணப்பட்டு கொண்டிருந்தார்கள், சிலர் வீட்டை நோக்கி, சிலர் உறவினர்களை நோக்கி, சிலர் தேவாலயங்களை நோக்கி, சிலர் தூங்கா நகரமான பாரிஸின் இரவு கேளிக்கை விடுதிகளை நோக்கி, சிலர் உணவு விடுதிகளை நோக்கி, இன்னும் சிலர் புதிய உறவுகளை நோக்கி, எல்லோரும் ஏதோ ஒரு இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, எல்லார் மனதிலும் அந்த நேரத்தில் புதிய உற்சாகம் தவழ்ந்திருப்பதை காண முடிந்தது. திரும்பவும் அதே நெரிசலை என் மெட்ரோ ரயில் பயணம், நான் வீடு செல்ல டிராம் ஸ்டேஷனில் நின்றிருந்தேன். அங்கு 5 இளைஞர்கள் இல்லை சிறுவர்கள் – 17 அல்லது 18 வயதிருக்கும் – அதில் ஒருவன் போதை தலைக்கேறி கால் தரையில் பாவி நிற்க முடியாமல் அவனை இரண்டு நண்பர்கள் கைத்தாங்கலாய் இருபக்கமும் பிடித்தபடி அவன் கால்கள் தரையில் தேய ட்ராமுக்குள் ஏற்றினர். அவனை பெற்றவர் யாரோ, யாருக்கு தம்பியோ அண்ணனோ, ஆனால்…. அந்த சிறிய வயதில் அந்த பெரும் போதை என்னை அதிர வைத்தது. கண்ணுக்கு தெரிந்து இந்த சிறுவன், தெரியாமல் எதனை சிறுவர்கள் சிறுமிகளோ, இளைஞர்களோ, இந்த போதை கலாச்சாரத்தின் பேரழிவை நினைத்து மனம் பயத்திலும், வேதனையிலும் வீடு நோக்கி நடை போட்டது.

– சுஜாதா பூபதிராஜ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி