இலங்கை

பேரூந்து மோதி சிறுமி உயிரிழப்பு!

அவிசாவளை – கண்டி வீதியில், பிந்தெனிய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மற்றும் இரண்டு சிறுமிகள் மீது தனியார் பேரூந்து ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏழு வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் கேகாலை போனதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பேரூந்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி