செய்திகள்

பேஸ்புகிகால் வந்த விபரீதம்

மனைவி பேஸ்புக்குக்கு அடிமையானதால் கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்த அனூப் (28).மற்றும் அவரது மனைவி சவுமியா (23). தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளமான பேஸ்புக்கில் எந்நேரமும் மூழ்கியிருப்பதை சவுமியா வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் இது தொடர்பாக கணவன் மனைவியிடயே தகராறு ஏற்பட்டது.

இதன்போது சவுமியாவின் சகோதரர் ரவிச்சந்திராவிடம் அனூப் நடந்த விடயங்களை கூறி சவுமியாவை அவர் வீட்டுக்கே அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து அனூப்பை சமாதானம் செய்த ரவிச்சந்திரன் காலையில் குறித்து நேரில் பேசுவதாக கூறினார். பின்னர் காலையில் அனூப் வீட்டுக்கு ரவிச்சந்திரன் வந்த போது அவர்களது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது.

சந்தேகமடைந்த அவர் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து வீட்டுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது  அனூப்பும், சவுமியாவும் தனித்தனியறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.

இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து மெலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி