சினிமா

பொங்கல் விடுமுறை போச்சு… குடியரசு தின விடுமுறையைக் குறிவைக்கும் சுந்தர்.சி






CM|



Last Updated:
செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:31 IST)


சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படம், குடியரசு தின விடுமுறையில் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.


சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி இருக்கிறது. ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி, ரோபோ சங்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.


 


இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’,  விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ என பெரிய படங்கள் ரிலீஸாவதால், இந்தப் படத்துக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.


 


எனவே, குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். விஷாலின் ‘இரும்புத்திரை’, உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்கள் 26ஆம் தேதி  ரிலீஸ் லிஸ்ட்டில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ளன. இதுதவிர, அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படமும் ஜனவரி 26ஆம் தேதி  ரிலீஸாக இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி