உலக செய்தி

போகி புகையால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

சென்னை தமிழர்கள் கொண்டாடிய போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகையால் சென்னை விமான நிலையத்தின் இயக்கம் ஐந்து மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாயினர்.

தமிழகத்தில், தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை முதல், மக்கள் தமது வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை, ஆடைகள் எனப் பல்வேறு  பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.

மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் உள்ளது. இந்த பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு  புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 அத்துடன்  சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சுமார் பத்து விமானங்கள் திசை திருப்பப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து புறப்படவிருந்த பத்து விமானங்கள் ஐந்து மணிநேரம் தாமதமாகவே இயக்கப்பட்டன.

இந்தத் திடீர் தாமதத்தால், குறித்த நேரத்துக்கு குறித்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகள் தடுமாற்றம் அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி