தெரிந்துகொள்ளுங்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த கத்திரிக்கா!Last Updated:
வியாழன், 17 மே 2018 (18:55 IST)


தினசரி சமையலில் பயன்படுத்தும் கத்திரிக்காவில் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. 


 


கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து கீழே காண்போம்:


 


ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது. 


 


கத்தரிக்காயின் தோலில் உள்ள ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி “ஆன்தோ சையனின்” புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது. 


 


கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிறைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. 


 


கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும். 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி