உலக செய்தி

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் திடீர் சோதனை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் மலேசிய பொலிஸார் சோதனை நடாத்தியுள்ளனர். முன்னாள் பிரதமரின் வீடு நேற்றிரவு பொலிஸாரினால் சோதனையிடப்பட்டது. அவர் தேர்தலில் தோல்வியடைந்து ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனை நடவடிக்கைகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் ஊடகங்களில் வெளிவரவில்லை. முன்னாள் பிரமதமர் நஜீப் ரசாக்கிற்கு உள்ள சகல ஊழல் குற்றச்சாட்டுக்கள்  தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க போவதாக மலேசியாவின் புதிய பிரதமர் மகாதீர் முஹம்மட் தெரிவித்துள்ளார். எனினும் தான் எவ்வித குற்றமும் இழைக்கவில்லையென முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி