இந்தியா

மாணவிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

ன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸார் நேற்றிரவு கைதுசெய்தனர்.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இலப்பவிளை அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு ஆசிரியர் பொன்ராஜதுரை (49) கடந்த வாரம் பாலியல் தொந்தரவுகொடுத்துள்ளார். இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று காலை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதுகுறித்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்ராஜதுரையை நேற்று இரவு கைதுசெய்தனர். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்து ஒருவாரமே ஆனநிலையில், ஆசிரியரின் இந்தச் செயல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி