தொழில்-நுட்பம்

மீண்டும் விலை குறைப்பு: என்ன ஆனது சாம்சங் நிறுவனத்திற்கு?Last Updated:
திங்கள், 4 ஜூன் 2018 (11:29 IST)

கடந்த ஆண்டு ஜூன் மாதம், சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மீது விலை குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 


 


ஆம, கடந்த மார்ச் மாதம்தான் கேலக்ஸி ஜெ7 ப்ரோ விலை ரூ.20,900-ல் இருந்து ரூ.18,900-க்கு ரூ.2000 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டது. 

 


இந்நிலையில், கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.16,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறதாம். இது குறித்த அறிவிப்பு சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் இடம்பெறவில்லை. 

 


ஒருவேளை சாம்சங் தனது விற்பனையில் சரிவை சந்தித்து வருவதால், இது போன்ற தள்ளுபடி மற்றும் சலுகைகள் வாடிக்கையாளர்களை கவர மேற்கொள்ளப்படுகிறதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. 

 


சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ சிறப்பம்சங்கள்:


# 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே


# ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்


# 3 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி


# 13 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா


# கைரேகை ஸ்கேனர், 3600 எம்ஏஎச் பேட்டரி திறன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி