கலாச்சாரம்

முறுக்கு மீசை முதல்வனே!


முறுக்கு மீசை முதல்வனே
முண்டாசு கட்டிய வீரனே

சுதந்திர தீ மூற்றி – விடுதலை
வேட்கையை வேர் பிடிக்க வைத்தவனே

கவி வாள் சுழற்றி
கயமைகளை களைந்தவனே

மானிட உணர்வறிந்து
அச்சம் நீக்கத் துடித்தவனே

பெண்மையே பெரும் சக்தியென
அர்த்தநாரியாய் நின்றவனே

விரல் பிடித்து அழைத்தே
சாதி வேரை அறுத்தவனே

துரத்திய வெள்ளையனை
வியர்க்க வைத்த வித்தகனே

வறுமை நோயிலும்
கொள்கை நதியோடு பாய்ந்தவனே

எதிர்காலம் கணித்து
எழுச்சி பெற்ற பேரலையே

உன் வார்த்தைகளின் வலிமையறியாது
முடங்கி விட்டோம் மூலையிலே

தெளிந்து பார்க்கையிலே
மறந்து விட்டோம் பார் போற்றிடவே

விட்டு சென்ற பொக்கிசத்தை
புசிக்கையில்
இழந்து விட்டோம் உன்னை எளிதாய்

மறுபிறவி எடுப்பாயோ?
மறுமலர்ச்சி தாராயோ?

உன்னைப் போற்றி கொண்டாடும்
உலகை காண்பாயோ?

– சிவமணி, வத்தலக்குண்டு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி