இலங்கை

முள்ளிவாய்க்காலில் வெள்ளையடிக்க மாணவர்கள் வேண்டாம்?

மே 18 என்ற புனித நாளில் இனப்படுகொலையின் பங்காளிகளுக்கும் இடமளித்து அந்நிகழ்விற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள். களங்கம் ஏற்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகின்றோமென சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அனைவரும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக நினைவுகூருவோம் என்ற தங்களின் கோரிக்கையை வரவேற்றவர்களில் நானுமொருவன். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பையேற்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாக ஒற்றுமையாக ஓரிடத்தில் நினைவுகூருவோம். இதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமே தலைமைதாங்க வேண்டும். இப்புனித நாளில் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் தவிர்க்கப்படவேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

ஆனால் இனப்படுகொலையாளிகளும் இனப்படுகொலைக்கு துணைபோனவர்களும் நடந்தது இனப்படுகொலையல்ல என்று கூசாமல் கூறியவர்களும் வருகின்ற நிகழ்வுக்கு இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வருவார்கள். அவர்கள் வருவார்களென்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியுமெனவும் சிந்தியுங்கள் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை கோரியிருப்பதுடன் தமிழ்த்தேசியத்தின் பாதையில் நீங்கள் பயணிக்கும்வரை மட்டுமே தமிழ்மக்கள் உங்களோடு பயணிப்பர் என்பதை மறந்துவிடாதீர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக, மாணவர்களிற்கு வவுனியா அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ்க்கூட்டமைப்பு, முகத்தில், பூசிய கரியை அல்லது, முகத்தில் காறி உமிழ்ந்ததைத்துடைத்துக்கொண்டு அவர்கள் அரசியல், பாதைக்கு மக்களிடம் மதிப்புப்பெற்றுக்கொடுக்க இப்போது பல்கலைககழக மாணவர் ஒன்றியம் அலறியடிக்கின்றதென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி