கலாச்சாரம்

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் நடத்தும் தைத்திருநாள் விழா – பொங்கல் விழாவில் பங்கேற்க அழைப்பு!


டல்லஸ்: அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் மாநகரின் “மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க”த்தின் சார்பில், “தமிழர் திருநாள் பொங்கல் விழா” வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழை வாழ்த்தும் தமிழர்கள் இணைந்து தமிழர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாட இருக்கிறார்கள். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் தொடங்கி 40 ஆம் ஆண்டின் வெற்றியைக் கொண்டாடவும் உள்ளார்கள்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

வள்ளுவம் போற்றியபடி வாழும் உயிர்க்கெல்லாம் உறவாகவும், உணவளித்து உயிர் வாழச்செய்து கொண்டு இருக்கும் உழவர்கள் ஒவ்வொருவரையும் உள்ளத்தால் வணங்கி வாழ்த்திச் சிறப்பிக்கவே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவின் தனிச்சிறப்புகள்

1. டாலஸில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் இணைந்து நடத்த இருக்கும் முதல் விழா.

2. தாய்நாட்டைவிட்டு வந்தாலும், தமிழின் மடியும் தாய் மடிதான். 15 புதுமணம் கொண்ட 15 தம்பதிகளுக்குத் தலைப்பொங்கல் கொண்டாட்டம்.

3. 108 பெண்கள் இணைந்து படைக்கும் அறுசுவை உணவுகள் உண்டு மகிழக் காத்திருக்கிறது.

4. உடைகள், அணிகலன்கள் எனப் பெண் தொழில் முனைவோருக்கான 13 பல்பொருள் விற்பனை அங்காடிகள் , அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கட்டணம் இன்றி அளிக்கப்பட்டுள்ளது.

5. தமிழன் உளம் மகிழும் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. பனி இல்லாத மார்கழியா? என்பது போல் கரும்பு இல்லாமல் பொங்கல் விழாவா? கரும்புகள் விற்பனையும் உள்ளது.

7. பொங்கல் விழாவிற்கு என்று சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட புகைப்படச் சாவடிகள்.

2500 நபர்களுக்கு மேல் எதிர்பார்க்கப்படும் இவ்விழாவிற்கு நீங்கள் அனைவரும் வருகை தந்து உழவையும், உழவரையும் கொண்டாட அழைக்கிறோம்.

பொங்கோ பொங்கல்!!

நாள்: 13-ஜனவரி-2018, சனிக்கிழமை
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
இடம்: SLPS Community Center,
1910 N Britain Rd, Irving, TX 75061

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி