அழகு குறிப்பு

மெலிதான கூந்தலை அடர்த்தியாகக் காட்ட என்ன பண்ணலாம்?

நியூ ஸ்டைல்

உங்கள் கூந்தல் நீண்ட அதே நேரத்தில் ஒல்லியாக தென்பட்டால் அதற்கு புதிய ஹேர் ஸ்டைல் தீர்வாக அமையும். உங்களுக்கு நீண்ட பாப் கட் அழகாக இருக்கும். இது இயற்கையாகவே உங்கள் முடியை அடர்த்தியாக காட்டும். உங்கள் கூந்தல் மிகவும் ஒல்லியாக காணப்பட்டால் ஸ்போர்ட்ஸ் ஷார்ட் ஹேர் கட் யை செய்து கொள்ளுங்கள். கண்டிப்பாக இது உங்களுக்கு ஏதுவாக அமையும். அதே நேரத்தில் உங்கள் முகத்திற்கு தகுந்தாற் போல் முடியை வெட்டிக் கொள்ளுங்கள்.

மற்றொரு ட்ரிக் என்னவென்றால் ஒல்லியான கூந்தல் உடையவர்கள் தங்கள் தாடை நீளம் வரை முடியை வெட்டிக் கொள்ளலாம். இதனால் உங்கள் கூந்தல் பார்ப்பதற்கு அடர்த்தியாக தெரியும்.

லேயர்ஸ்

லேயர்ஸ்

உங்கள் கூந்தல் மீடியமான நீளத்தில் இருந்தால் உங்களுக்கு குட்டையான ஹேர் ஸ்டைல் சரி வராது. எனவே நீங்கள் அடர்த்தியை அதிகப்படுத்தி காட்ட லேயர்டு ஹேர் கட் செய்து கொள்ளலாம். லேசான லேயரே போதும் உங்களுக்கு ஒரு நல்ல லுக் கிடைக்கும்.

குட்டையான கூந்தல்

குட்டையான கூந்தல்

நீங்கள் ஏற்கனவே குட்டையான கூந்தலை உடையவராக இருந்து இன்னமும் உங்கள் கூந்தல் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால் டீஸிங் ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கும். தலைக்கு மேல் பகுதியில் உள்ள முடிகளை டீஸிங் செய்யும் போது நல்ல அடர்த்தியை பெற இயலும்.

உங்களுக்கு டீஸிங் செய்ய தெரிய வில்லை என்றால் இந்த சிம்பிள் ட்ரிக்ஸை பின்பற்றுங்கள். உங்கள் முடியை தலையை நோக்கி மேலாக்க இழுக்கும் போது நல்ல லுக் கிடைக்கும். இது உங்களுக்கு நல்ல அடர்த்தியான லுக் கொடுப்பதோடு ரெம்ப கேசூவல் ஆக இருக்கும்.

அதே மாதிரி டீஸிங் செய்யும் போது நெருக்கமான பல் வரிசை கொண்ட சீப்பை உபயோகியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

ஹேர் கலரிங்

ஹேர் கலரிங்

உங்கள் கூந்தலுக்கு லேசாக கலரிங் செய்யும் போது ஒரு அடர்த்தியான பார்வையை கொடுக்கும். உங்கள் கூந்தலுக்கான கலரை உங்கள் முக நிறத்தை கொண்டோ மற்றும் தலைமுடி கலரை கொண்டோ தேர்வு செய்யுங்கள். அடர்ந்த கலர் களை விட லேசான வெளிரிய நிறங்கள் உங்களுக்கு நல்ல அடர்த்தியை காட்டும். உங்களுக்கு செயற்கை நிறங்கள் பிடிக்கவில்லை என்றால் இயற்கையான நிறங்களை தேர்வு செய்யுங்கள். இயற்கையான நிறங்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் உங்கள் கூந்தலுக்கு நிறமளிக்கும்.

பியூட்டி பொருட்கள்

பியூட்டி பொருட்கள்

உங்கள் கூந்தலின் அடர்த்தியை கூட்ட அதற்கான ஸ்பெஷல் பியூட்டி பொருட்களை பயன்படுத்துங்கள். ஸ்பெஷல் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போன்றவை கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. இப்பொழுது இதற்கென மார்க்கெட்டில் நிறைய பிராண்ட்கள் வலம் வருகின்றன. எனவே இதனை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

அலை போன்ற கூந்தல்

அலை போன்ற கூந்தல்

ஒல்லியான கூந்தலுக்கு வேவ்ஸ் (அலை) போன்ற அமைப்பு நல்ல தீர்வாக இருக்கும்.

வீட்டிலேயே இந்த அலை போன்ற அமைப்பை எப்படி பெறுவது என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

ஹேர்ஸ்டைல் மாற்றம்

ஹேர்ஸ்டைல் மாற்றம்

மற்றொரு சிறந்த யோசனை உங்கள் ஹேர் ஸ்டைல்யை புதிது புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். கூந்தலின் நடுப்பகுதியிலிருந்து பிரித்து அதை ஒரு பக்கமாக முன்னாடி போட்டு கொள்ளலாம். இந்த சிறிய ட்ரிக் நம்பவே மாட்டீங்க உங்கள் கூந்தலை அடர்த்தியாக காட்டும். என்னங்க ஏகப்பட்ட ட்ரிக்ஸ்களை கையில் வைத்துக் கொண்டு இன்னும் என்ன யோசனை, முயற்சி செய்து பாருங்கள். இனி உங்கள் கூந்தலும் கண்ணு படப் போகுது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி