இலங்கை

யாழில் இந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தைச் சாராதவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூர் முன்றலில் இன்று (புதன்கிழமை) 4 மணியளவில் மாலை மேற்கொள்ளப்படவுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்தினை அகில இலங்கை சைவ மகா சபை முன்னெடுக்கவுள்ளது.

நல்லாட்சி அரசினால் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த இந்து மதத்தினரும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், குறித்த அமைச்சுப் பதவிக்குப் பொருத்தமானவர்களை இனங்காண்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இந்து மத விவகாரங்களுக்கு ஒரு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள இந்து மத அமைப்புக்களும் தமது கண்டனத்தினைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி