இலங்கை

யாழில் கரை ஓதுங்கிய சடலங்கள்: மன்னாரில் காணாமல் போனவர்கள் என சந்தேகம்!

யாழ் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண்கள் இருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் முன்னர் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில், பின்னர் ஊர்காவற்றுறை பகுதியில் இன்னொரு சடலம் கரையொதுங்கியுள்ளதாக இன்று (புதன்கிழமை) மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மன்னார் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று மீட்கப்பட்ட இரு சடலமும் அவர்களுடையதாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் பயணித்த படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி