ஆரோக்யம்

ரத்தம் உறையாம கடகடன்னு உடம்பு முழுக்க பாயணும்னா இத சாப்பிடுங்க…

பூண்டு

“ஜமா இன்டேனல் மெடிசன்” மார்ச் 2001 ல் வெளியிடப்பட்ட கட்டுரையின் தகவல் படி பூண்டு நமது இரத்தம் உறைவதற்கு காரணமான இரத்த தகடுகளை சரியான அளவில் இருக்க உதவி செய்கிறது. அதே நேரத்தில் மற்றொரு தகவல் என்ன கூறுகிறது என்றால் நீங்கள் தினசரி பூண்டை சரியான அளவில் எடுத்து வந்தால் மட்டுமே இந்த இரத்த அடர்த்தி குறைப்பை பெற இயலும் என்கிறது.

மே 2013 ல் வெளியான “முக்கியமான விமர்சனங்கள் அடங்கிய உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து” கட்டுரையானது சொல்ல வரும் கருத்து என்னவென்றால் எல்லா மருத்துவ முயற்சிகளிலும் பூண்டை பயன்படுத்தி உள்ளனர். இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் பூண்டு இரத்தம் உறைவதை தடுக்குமா? அதே நேரத்தில் இதை இரத்த உறைதல் தடுப்பு மருந்துக்கு பதிலாக இதை எடுத்து வரலாமா போன்ற இது போன்ற கேள்விகளுக்கு அவர்கள் விடையளித்துள்ளனர். மேலும் பூண்டில் உள்ள இரத்த அடர்த்தியை குறைக்கும் பொருட்கள் குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தப் போவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மீன் மற்றும் மீன் எண்ணெய்

மீன் மற்றும் மீன் எண்ணெய்

மீன் எண்ணெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இபிஏ (எய்கோசப்பேன்டோனிக் அமிலம்) மற்றும் டிஎச்ஏ(டாக்கோஷாகெக்ஷோனிக் அமிலம்) போன்ற இரத்த அடர்த்தியை குறைக்கும் பொருட்கள் உள்ளன.இபிஏ மற்றும் டிஎச்ஏ இரத்த உறைதல் செயலுக்கு காரணமான காரணியை தடுத்து இரத்த கட்டுதலை தவிர்க்கிறது. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் மருந்து கடைகளில் கிடைக்கிறது. உற்பத்தியாளர்களை பொருத்து இதை எடுத்துக் கொள்ளும் அளவு வேறுபடும்.

காணப்படும் மீன்கள்

காணப்படும் மீன்கள்

இந்த இபிஏ மற்றும் டிஎச்ஏ கொழுப்பு மீன் காட், சால்மன், மத்தி, சூரை மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் காணப்படுகிறது. அமெரிக்க இதய சங்கம் வெளியிட்டுள்ள கருத்துப்படி ஒரு நாளைக்கு 0.5 – 1.8 கிராம் இபிஏ, டிஎச்ஏ எடுத்து கொண்டால் இதய நோய்கள் வருவது குறையும். இல்லையென்றால் வாரத்திற்கு இரண்டு மீன்கள் வரை சாப்பிட வேண்டும் என்கின்றனர்.

விட்டமின் ஈ

விட்டமின் ஈ

விட்டமின் ஈ இரத்தம் உறைதலை தடுக்கிறது. இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கையாகவே இது இந்த செயலை செய்யுமா? அதற்கான விட்டமின் ஈ யின் சரியான அளவு என்ன? போன்ற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அடங்கிய உணவுகள்

அடங்கிய உணவுகள்

தானியங்கள், கோதுமை எண்ணெய், பாதாம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, விதைகள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளன.

கெளமெரின் உள்ள மூலிகைகள்

கெளமெரின் உள்ள மூலிகைகள்

இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்து பொருள் பொதுவாக வார்ஃபெரின் (கெளமெடின்) தான் பரிந்துரைக்கப்படும். இந்த பொருள் இயற்கையில் சில மூலிகைகளில் காணப்படுகிறது. அந்த மூலிகையிலிருந்து பெறப்படும் இந்த பொருள் கெளமெரின் என்றழைக்கப்படுகிறது கிட்டத்தட்ட 3400 கெளமெரின் அடங்கிய மூலிகைகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சல தாவரங்கள் மட்டுமே இரத்தம் உறைதலை கட்டுப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அதுவும் அதன் சக்தி வார்ஃபெரின் மாத்திரைகளை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. எனவே இது இரத்தம் உறைதலை தடுக்கும் என்பதற்கு இதுவரை எந்த சான்றுகளும் இல்லை. எனவே நிறைய டாக்டர்கள் இந்த மாதிரியான மூலிகைகளை பரிந்துரைப்பதில்லை. ஆஞ்சலிகா ரூட், ஆர்னிகா மலர், சோம்பு, கெமோமில், வெந்தயம், அதிமதுரம் ரூட், வோக்கோசு மற்றும் சிவப்பு குளோவர் ஆகியவற்றில் கௌமெரின் அதிக அளவில் உளள்ன.

எச்சரிக்கை

எச்சரிக்கை

தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு வாரியம் 2011 ன் கணக்கீடு படி அமெரிக்காவில் உள்ள 53 % பெரியவர்கள் தினசரி டயட்டரி மருந்துகளை எடுத்து வருகின்றனர். எனவே உங்கள் மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கத்தை குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள். மேலும் இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் இரத்தம் உறைதலை தடுக்கும் மாத்திரைகளுக்கு பதிலாக இயற்கை முறையை நாடாதீர்கள்.

ஏனெனில் இந்த இயற்கை பொருட்களில் இரத்தம் உறைதலை தடுக்கும் பொருட்கள் இருந்தாலும் அது குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் இயற்கை முறையை நடுவதற்கு முன் அதனை எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் அதன் விளைவுகள் குறித்து சரியான சான்றிதழ்கள் அவசியமாகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி