பங்களாதேஷ் அணியில் புதிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.அது என்னவென்றால் டெஸ்ட் அணித்தலைவர் பதவி இப்பொழுது ஷகீப் அல் ஹசனின் கைக்கு மாறியுள்ளது.அண்மையில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் சிறந்த தடுப்பாட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.எனவே இவர் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை பங்களாதேஷ் கிரிக்கட் சபை எடுத்துள்ளது.முஷ்பிகுர் ரஹீம் தலைமையில் பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றிகளை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்தமை மெச்சத்தக்கது.எனவே அவர் துடுப்பாட்டத்தை கவனம் செலுத்த வேண்டுமென கிரிக்கட் சபை விரும்புகின்றது.அதேவேளை ஷகீப் ஹசன் சிறந்த சகல துறை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
