இலங்கை

வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கிவைப்பு

வவுனியாவில் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் வேண்டுகோளுக்கமைவாக லயன்ஸ் கழகத்தால் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா – குடியிருப்பில் அமைந்துள்ள மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 3 குடும்பங்களைச்சேர்ந்த விசேட தேவையுடையோர்களுக்கு நேற்று (சனக்கிழமை) இச்சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் லயன் கழக மருத்துவர் சி.றமணன், ஆர்.செந்தில்குமரன், எம்.ரி.எம்.றசீக், சாய்ராம் மற்றும், வை.கருணாநிதி, க.சுமந்திரன் மற்றும் க.தியாகராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி