இலங்கை

வவுனியாவில் பேரூந்துகள் சேவை முடக்கம்: பயணிகள் பாதிப்பு

வவுனியா புதிய பேரூந்து நிலைத்தில் இருந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் உள்ளுர் சேவைகளில் ஈடுபடாதமையினால் இன்று (புதன்கிழமை) பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்துள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் செல்லவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றமையினாலேயே இந் நிலை ஏற்பட்டதாக போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வவுனியாவில் இருந்து தூர இடங்களுக்குச் சென்று பணிபுரியும் பணியாளர்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள், வங்கி உத்தியோகத்தர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை பருவகால சீட்டை பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் இது தொடர்பாக கடும் விசனம் வெளியிட்டுருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி