கிசு கிசு

விஜய் 60: எடையைக் குறைத்து கல்லூரி மாணவராக நடிக்கும் விஜய்?

சென்னை: பரதன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக விஜய் தனது உடல் எடையை குறைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தன்னுடைய 60 வது படத்தில் நடித்து வருகிறார். 2 வேடங்களில் விஜய் நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத், கீர்த்தி சுரேஷ் இருவரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் தன்னுடைய தோற்றத்திற்காக 10 கிலோ வரை எடையைக் குறைத்து, விஜய் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
படத்தில் கல்லூரி தொடர்பான காட்சிகள் இருப்பதால் விஜய் கல்லூரி மாணவராக நடிக்கலாம் என்றும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைசியாக 2012 ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ‘நண்பன்’ படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Vijay Play a College Student in Vijay 60.

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி