இலங்கை

விடுதலை புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு அல்ல: சுவிஸ் நீதிமன்றம்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், குற்றவியல் அமைப்பு அல்லவென சுவிஸ் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதியாளர்களாக செயற்பட்டார்களென  குற்றஞ் சுமத்தப்பட்ட 13 பேருக்கும் விடுதலை மற்றும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஐவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 8 பேருக்கும் மோசடி குற்றச்சாட்டில் ஒத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதித் திரண்டல், அதனை விநியோகித்தல்  மற்றும் குற்றவியல் அமைப்பில் பங்கெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படாதமையினால் சுவிஸ் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் குறித்த வழக்கு விசாரணையின்போது அரசாங்கம் செலவிட்ட 4 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகளை குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டுமென அரச சட்டதரணியால் வாதிடப்பட்டது

எனினும் அதனை அவர்கள் செலுத்த வேண்டியது இல்லையெனவும் மாறாக  அரசாங்கம் அவர்களுக்கு நட்டயீட்டை வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி திரட்டல் மற்றும் அதனை விநியோகித்தல் ஆகிய செயற்பாடுகள் நிரூபிக்கப்படாதமையினால் உலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு குற்றவியல் அமைப்பு அல்லவெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி