ஆரோக்யம்

விரைவில் உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!

உணவு :

நீங்கள் எடுக்கிற உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கலோரி குறைவான உணவினை எடுக்க வேண்டும். கலோரியை குறைக்க வேண்டும் அதே நேரம் உங்களுக்கு தேவையான எனர்ஜியும் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் பெஸ்ட் சாய்ஸ் ஃபைபர். அதிகப்படியான ஃபைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு முப்பது கிராம் ஃபைபர் வரை எடுத்துக்கொள்ளலாம். ஃபைபரிலேயே இரண்டு வகை இருக்கிறது. ஒன்று எளிதில் கரையக்கூடியது மற்றொன்று எளிதில் கரையாது.

செரிமானம் :

செரிமானம் :

எளிதில் கரையக்கூடிய ஃபைபர் தண்ணீரை உறிந்து கொள்ளும். செரிமானத்தின் போது ஜெல் போல ஆகிடும். இதனால் செரிமானம் தாமதமாகும். கரையாத ஃபைபர் எளிதில் செரிக்காது, ஆக ஃபைபர் உணவுகளை சாப்பிடுவதால் நீங்கள் நீண்ட நேரம் பசியின்றி இருக்க முடியும்.

கண்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள். நம்முடைய பெரும்பாலான உணவுகளில் கார்போஹைட்ரேட் தான் நிறைந்திருக்கிறது. இதில் முக்கியமான பிரச்சனை என்ன தெரியுமா? ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டிலும் நான்கு கலோரிகள் வரை இருக்கிறது.

ஆக ஒரு பவுல் அரிசி சாதம் அல்லது கோதுமை எடுத்துக் கொள்வீர்களானால் உங்கள் உடலில் எவ்வளவு கலோரி சேரும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதே மூன்று வேலை உணவு என்றால்?

கொழுப்பு :

கொழுப்பு :

எடை அதிகரிக்க கொழுப்பு மட்டுமே காரணம், அதனால் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்லி முதல் வேலையாக அதைச் செய்கிறார்கள். கொழுப்பை நேரடியாக தவிர்ப்பது தவறு, நம் உடலுக்கு கொழுப்பும் தேவை என்பதை மறந்து விடக்கூடாது.

கொழுப்பில் இரண்டு வகை இருக்கிறது நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்பு தேவை.

கொழுப்பு உணவுகள் :

கொழுப்பு உணவுகள் :

ஜங்க் ஃபுட் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளில் கெட்ட கொழுப்பு அல்லது சாச்சுரேட்டட் கொழுப்பு தான் அதிகளவில் இருக்கிறது. இவை அதிகளவு சேர்ந்தால் தான் நம் உடலுக்கு பிரச்சனை ஏற்படும். நல்ல கொழுப்பு அதிகளவு சேர்த்துக் கொண்டால் அவை நம் உடலுக்கு நன்மை ஏற்படுத்துவதுடன் கெட்ட கொழுப்பினை அதிகளவு சேர்க்காமல் தவிர்த்திடும்.

நட்ஸில் அதிகளவு நல்ல கொழுப்பு தான் இருக்கிறது.

வொர்க் அவுட் :

வொர்க் அவுட் :

உணவில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களே அதேயளவு உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதாவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது வாக்கிங் அல்லது ஜாக்கிங் சென்று வர வேண்டியது அவசியம். எந்த பயிற்சியுமே செய்யாமல் இருப்பதற்கு காலை அல்லது மாலை வேலைகளில் நீங்கள் மேற்கொள்கிற வாக்கிங் முக்கியமான ஒன்றாகும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால் ஒரே மாதிரியாக கலோரி கரைந்து உங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் அதோடு தசைகள் வலுவடையும்

எம்டி கலோரிஸ் :

எம்டி கலோரிஸ் :

உணவு என்று எடுத்துக்கொள்வதை விட போகிற போக்கில் லைட்டா ஸ்நாக்ஸ் மட்டும் என்று சொல்லி எவ்வளவு கலோரிஸ் உள்ளே எடுத்துக் கொள்கிறோம் என்று பாருங்கள் கவனமாக அவற்றை எல்லாம் தவிர்த்திட வேண்டும்.

டயட் என்று சொன்னால் முக்கியமாக மூன்று வேலை உணவினை மட்டும் அதிகளவு கவனம் செலுத்துவோம் ஆனால் அதற்கு மத்திகளில் காபி, சாக்லெட்,ஐஸ்க்ரீம் இப்படி என்னென்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு நாள் தானே…. ஒரேயொரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் தானே…. என்று சொல்லி சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம்.

ஸ்நாக்ஸ் :

ஸ்நாக்ஸ் :

இங்கே பலரும் தவறுவது ஸ்நாக்ஸில் தான். டயட் என்ற பெயரில் வழக்கமான உணவைத் தவிர்த்து பிற உணவை சாப்பிடுவதாலோ அல்லது குறைவான உணவு எடுத்துக் கொள்வதினால் சீக்கிரத்திலேயே பசித்து விடுகிறது. ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் என்னால் உணவு எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி கண்டதையும் ஸ்நாக்ஸாக எடுத்துச் சாப்பிட்டு விடுகிறோம்.

அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று ஒரு போதும் யோசிப்பதில்லை, டயர்டாய் இருக்கிறது ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிட்டால் சுறுசுறுப்பாக வேலை பார்க்கலாம் என்று சொல்லி காலையிலிருந்து ஒரு நாளைக்கு எவ்வளவு கப் குடித்திருப்பீர்கள்? அவை எல்லாவறையும் தவிர்க்க வேண்டும்.

ஒரு நாள் மட்டும் :

ஒரு நாள் மட்டும் :

உடல் எடை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் எந்த காரணத்திற்காகவும் எஸ்க்யூஸ் கேட்டுக் கொள்ளாதீர்கள். இன்று ஒரு நாள் மட்டும், ஒரேயொரு பீட்சா என்று நீங்கள் கேட்கும் எஸ்க்யூகள் தான் உங்களது உடல் எடை குறையாததற்கு முக்கியமான காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நிறைந்த உணவுகள், சிப்ஸ்,சாக்லேட்,கேக்,சாஃப்ட் டிரிங்க்ஸ் ஆகியவற்றையெல்லாம் மிக கவனமாக தவிர்த்திட வேண்டும். இவை எளிதாக கிடைத்திடும். நீங்கள் தவிர்த்தாலும் உங்களைச் சுற்றியிருப்பவர்கள், சந்தர்பங்களினால் நீங்கள் சாப்பிட நேரிடலாம். ஆனால் இந்த நேரங்களில் எல்லாம் அவசியம் தவிர்த்திட வேண்டும்.

அளவு :

அளவு :

என்ன உணவாக இருந்தாலும் ஒரேநேரத்தில் மொத்தமாக சாப்பிடுவதை விட அதை சிறிய சிறிய பங்குகளாக பிரித்துச் சாப்பிடலாம். எல்லா நேரத்திலும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

தண்ணீராக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது தான் நல்லது. நீங்கள் ஒரு உணவு சாப்பிட்டால் அது போதுமானதா இல்லையா என்பதை மூளைக்குச் சேர குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். அதற்கு முன்பாகவே நிறைய உணவுகளை சாப்பிட்டால் இருபது நிமிடங்கள் கழித்து வயிறு முட்ட சாப்பிட்ட உணர்வு தோன்றும். தொடர்ந்து இப்படியே சாப்பிட்டு வந்தால் செரிக்காத உணவுகள் அப்படியே சேர்ந்து கொழுப்பாக மாறிடும்.

தண்ணீர் :

தண்ணீர் :

வழக்கமாக சொல்வது தான். இதை பலமுறை கேட்டிருப்பீர்கள் உடலுக்கு தண்ணீரின் அவசியம் என்ன தேவை என்ன போன்றவற்றை எல்லாம் உணர்ந்து கண்டிப்பாக தண்ணீரை குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காததும் உடல் எடை தொடர்ந்து அதிகரிக்க ஓர் காரணமாக இருக்கிறது.

சில நேரங்களில் தாகத்தை கூட தவறுதலாக பசியென்று நினைத்து உணவோ அல்லது ஸ்நாக்ஸோ எடுத்துக் கொண்டு விடுகிறோம். இதைத் தவிர்க்க தண்ணீர் அவசியம் .

நேரம் :

நேரம் :

ஒரு மாதம் மட்டும் முயற்சி செய்து விட்டு எடை குறையவில்லை என்று மீண்டும் பழைய படியே உணவு உண்ண ஆரம்பித்து விடாதீர்கள். உடல் எடை மெதுவாகத்தான் குறையும் தொடர்ந்து அதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அசட்டையாக இருக்கும் நேரமும் அல்லது உங்களை நீங்களே சமாதனப்படுத்திக் கொண்டு உணவு எடுத்துக் கொள்கிற நேரத்திலும் உங்களது எடை குறைக்க வேண்டும் என்ற லட்சியம் தவறுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி