இந்தியா

வெகுவிமரிசையாக நடைபெற்ற நாகை நீலாயதாட்சி அம்மன் திருத்தேரோட்டம்..!

நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறையும் காயாரோக சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் முதன்மை பெற்றதும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூன்று சமய குறவர்களால் பாடல் பெற்றதும், சிவராஜதாணி ஷேத்திரம் என்று பெருமையாக அழைக்கப்படுகின்ற திருத்தலம் இதுவாகும்.  இங்கு அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான அதிபக்த நாயனாருக்கு இறைவன் காட்சிகொடுத்த திருத்தலம் என்பதும், சக்தி பீடங்களில் அறுபத்து நான்கினுள் ஒன்றானதும், சப்தவிடங்கர் திருக்கோயில்களில் ஒன்றானதும், திருப்புகழ் பாடி பெருமைக்குரிய தலமாகும்.  

பண்டாரிய முனிவரை தன் உடலோடு ஏற்றுக் கொண்டதால் இத்தலத்துச் சுவாமியின் திருநாமம் காயாரோகணம் எனப் பெயர் பெற்றது.  காயா என்றால் உடம்பு.  ரோகனம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருளாகும். சாலிதக மகாராஜாவுக்குத் திருமண கோலத்துடன் காட்சி தந்ததால் நீலாயதாட்சி அம்மனின் ஆடிப் பூர உற்சவம் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  

இதற்கிடையே இன்று வைகாசி மாதம் 12ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள், மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கத் தேரோட்டம் துவங்கியது. கைத்தறித் துறை அமைச்சர் ஓய்.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  மேலும் இன்று மாலை ஸ்ரீ ரெத்தின சிம்மாசன பாராவார தரங்க நடன சுந்தரவிடங்க தியாகராஜ சுவாமிகள் திருத்தேரைவிட்டு இறங்கி, இராஜதாணி மண்டபத்தில் எழுந்தருளி காட்சிதர உள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி