சீரியல் ஸ்பெசல்

வேந்தர் டி.வி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்னவெல்லாம் தெரியுமா?

சென்னை : வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ‘அறம் செய்வோம்’ என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

மக்களிடையே மனிதநேயம் தழைக்க வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘அறம் செய்வோம்’ தீபாவளி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. தீபாவளி அன்று காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேயர்களுக்குச் சிறந்த விருந்தாய் அமையும் .

அடுத்து காலை 9:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. நீட் பிரச்னையின்போது நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணிப் பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்தச் சிறப்பு பட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது.

Vendhar TV's diwali special programs

காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை நிகழ்ச்சி ‘நவீன நாட்டாமை’. நகைச்சுவை நாயகர்கள் முல்லை, கோதண்டம் இருவரும் இணைந்து கிராமத்து நாட்டாமையாகத் தீர்ப்பு சொல்லும் வித்தியாசமான இந்த நிகழ்ச்சி தீபாவளியைக் கொண்டாடும் சிரிப்பு வெடியாக மலர்கிறது.

Vendhar TV's diwali special programs

English summary

Various innovative shows are broadcast as Vendhar TV’s Diwali special. An debate show will be telecasted, that is headed by Sabari Mala, who is noticed in the NEET issue.

Story first published: Monday, October 16, 2017, 18:21 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி