இலங்கை

ஸ்ரீ நாகபூஷணி ஆலய திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமாகியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமான குறித்த விழா தொடர்ச்சியாக 16 நாட்கள் இடம்பெறும்.

மேலும் ஆலயத்தின் மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூன் 23 ஆம் திகதி சிவபூசைக் கைலைக் காட்சியும் இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13ஆம் திருவிழாவான 26 ஆம் திகதி கைலைக் காட்சியும் இரவு சப்பறத் திருவிழாவும் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து 27ஆம் திகதி இரதோற்சவமும், 28ஆம் திகதி தீர்த்தோற்சவமும் அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும், மறுநாள்இரவு பூங்காவனம், தெப்போற்சவம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி