இந்தியா

10 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்தி ரசித்த தம்பதியர்..! கும்பகோணத்தில் நடந்த கொடூரம்

கடந்த இரண்டு வருடங்களாக சிறுமி ஒருவருக்குக் கத்தரிக்கோலால் கிழித்து, அரிவாளால் தலையில் கொத்தி, கை நகத்தால் கிள்ளி, பிரம்பால் அடித்து இப்படிப் பல சித்ரவதைகளைச் செய்துள்ளனர் அரக்க மனம் படைத்த இருவர். கடந்த 25ம் தேதி அன்றும் இதே போல் அவளை அரிவாளால் தலையில் கொத்த ரத்தம் சொட்டிய நிலையில் வீட்டை விட்டு ஓடி வந்தவரை குழந்தைகள் நலக் காப்பகத்தினர் மீட்டு உரிய சிகிச்சைகள் கொடுத்து இப்போது அந்தச் சிறுமியைக் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைக் கேட்கும் மனங்கள் தன்னை அறியாமல் கலங்குகின்றன.

கும்பகோணத்தைச் சேர்ந்த தம்பதி முகமது அலி, ஆயிஷா. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள். சில வருடங்களுக்கு முன்பு முகமது அலி இறந்து விட்டார். ஆயிஷா சில மாதங்களுக்குப் பிறகு தனது மூத்த மகள் சாயிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அதே பகுதியைச் சேர்ந்த மெகராஜ் பானு, நசீர் என்பவரிடமும், இளைய மகளை வேறு ஒருவரிடமும் கொடுத்து விட்டு எங்கேயோ சென்று விட்டார்.

காலப் போக்கில் மெகராஜ் பானு, நசீர் இருவரும் சேர்ந்து சாயிராவைப் பல விதங்களில் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். கத்தரிக்கோலால் உடலில் கிழித்து, அரிவாளால் தலை மற்றும் உடலில் கொத்தி, பிரம்பால் உடல் முழுவதும் அடித்து, கை நகங்களால் கிள்ளி இப்படிப் பல கொடுமைகளை பத்து வயதே ஆன அந்தச் சிறுமிக்குச் செய்துள்ளனர். 

கடந்த 25-ம் தேதி இதே போல் சாயிராவைத் தலையின் உச்சியில் அரிவாளால் கொத்திக் கொடுமைப்படுத்துகின்றனர். வலி தாங்க முடியாமல் அலறித் துடித்திருக்கிறாள். பின்னர் இருவரும் அசந்த நேரம் பார்த்து தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். சாலையில் அந்த வழியாகச் சென்ற ஒருவர் பதறிப்போய் குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

மாவட்ட குழந்தைகள் நலத் தலைவர் திலகவதி சிறுமியை மீட்டு முதலுதவி சிகிச்சைச் செய்து குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து திலகவதியிடம் பேசினோம். கடந்த இரண்டு வருடமாக மெஹராஜ் பானு மற்றும் நசீர் இருவரும் அந்தச் சிறுமிக்குத் தாங்க முடியாத கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். தலை, கை, கால், முதுகு, பிறப்பு உறுப்புகளில் கூட சாயிராவை சைக்கோதனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அந்தக் காயங்கள் ஏற்படுத்திய வடுக்கள் உடல் முழுக்க அப்படியே இருக்கின்றன.

எங்களுக்குத் தகவல் கிடைத்து நாங்கள் முதலுதவி சிகிச்சை அளித்து தற்போது குழந்தைகள் நலக் காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறோம். அவளிடம் எந்தச் சான்றிதழ்களும் இல்லை. இருந்தாலும் அவளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க இருக்கிறோம். மிறட்சியிலிருந்து மீளாத அவளுக்கு கவுன்சலிங் கொடுக்கபட்டது. உடம்பில் தழும்புகள் இல்லாதா இடமே இல்லை.

இப்ப ரொம்பத் தெளிவாக இருக்கிறாள். என்னைக் கொடுமைப்படுத்திய அவர்களுக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுக்கணும் என்கிறாள். அதோடு என் அம்மா, என் தங்கையும் இதேபோல் யாரிடமோ கொடுத்து விட்டார். அவளையும் கண்டுபிடித்துக் கொடுங்கள் எனக் கதறுகிறாள். அதற்கான முயற்சிகளில் நாங்கள் இருக்கிறோம்.

அவள் உடம்பில் உள்ள தழும்புகள் அனைத்தும் சிகிச்சையின் மூலம் சரி செய்ய வேண்டும். நிச்சயமாக இருண்ட அவள் வாழ்கையில் ஒளியை ஏற்றி மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும். இதுதொடர்பாக அப்போதே நாங்கள் கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். கொடுமை என்னவென்றால் இவ்வளவு கொடுமைகளையும் செய்து விட்டு வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வந்த அந்தச் சிறுமியின் மீது நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக போலீஸில் புகார் சொல்லியிருக்கிறார்கள் அந்த அரக்க மனம் படைத்தவர்கள்’ என்றார்.

மேலும் சிலர், `கும்பகோணம் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாகப் புகார் கொடுத்ததும் வழக்கு பதிந்து விட்டார்கள். ஆனால், குற்றவாளிகள் கூட இருந்தும் அவர்களைக் கைது செய்யவில்லை. உடல் காயத்தோடு மன காயத்தால் இரண்டு வருடமாக தவித்த அந்த இளம் பிஞ்சுக்காகவாது அவர்களைக் கைது செய்திருக்கலாம்  ஆனால், செய்யவில்லை. இப்போது அந்த இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று ஜாலியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி